Education Loan Details in Tamil Nadu

Education Loan Details in Tamil Nadu:

வங்கி கல்வி கடன் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள்:

1) கல்வி கடன் என்றால் என்ன?

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு. சான்றிதழ் படிப்பு மற்றும் முதுகலை படிப்புகள் போன்ற உயர் படிப்புகளுக்கு பணம் செலுத்த மாணவர்களுக்கு வங்கிகளால் கல்விக் கடன்கள் வழங்கப்படுகின்றன. கல்விக் கட்டணத்தைத் தவிர, விடுதிக் கட்டணங்கள், உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பாடநெறி தொடர்பான பிற செலவுகள் போன்ற செலவுகளின் பிற அம்சங்களும் கல்விக் கடன் மூலம் ஈடுசெய்யப்படலாம்.

பெரும்பாலான மாணவர்களுக்கு முந்தைய கடன் வரலாறு இல்லாததால், பெற்றோர் அல்லது பாதுகாவலர் கல்விக் கடனுக்கான உத்தரவாதமாக இணை கையொப்பமிட வேண்டும். மேலும், 7.5 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் வாங்கினால் மட்டுமே சொத்து ஆவணங்கள், நிலையான வைப்புத் தொகைகள் போன்ற முக்கிய பிணையம் தேவைப்படுகிறது.

2) கல்வி கடன் பெற தொவது வயது வரம்பு உள்ளதா?

கல்விக் கடனுக்குத் தகுதி பெறுவதற்கு ஒரு மாணவரின் வயது வரம்பு இல்லை. கூட்டு விண்ணப்பதாரர் / இணை கடன் வாங்குபவர் / உத்தரவாததாரரின் வயது கடன் தொடங்கும் போது குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் இருக்க வேண்டும் மற்றும் கடன் முதிர்வு நேரத்தில் அதிகபட்ச வயது 70 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

3) எந்தெந்த படிப்புகளுக்கு எல்லாம் கல்விக் கடன் கிடைக்கும்?

இந்தியாவைப் பொறுத்தவரை UGC / AICTE / தமிழ்நாடு அரசு / மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விதமான படிப்புகளுக்கும் கல்வி கடன் வழங்க படும். டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளும் இதில் அடங்கும். வெளிநாடுகளில் உள்ள அனைத்துப் படிப்பிற்கும் கல்வி கடன் உண்டு, டிப்ளமோ தவிர.

4) தொலைதூர படிப்பு / பகுதி நேர படிப்புகள் பயிலும் மாணவர்கள் கல்வி கடன் பெற முடியுமா?

இல்லை.

5) கல்வி கடன் வாங்கி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படித்ததற்கான சான்றிதழை உடனடியாக தருவார்களா அல்லது விண்ணப்பதாரர் கடனை முழுமையாக செலுத்திய பிறகு சான்றிதழ் பெறுவார்களா?

கல்லூரி படித்ததற்கான சான்றிதழை கல்லூரியிலிருந்து படிப்பு முடிந்த உடன் பெற்றுக் கொள்ளலாம்.

6) கல்விக் கடன் பெற விண்ணப்பதாரர் பள்ளி அளவிலோ / மாவட்ட அளவிலோ முதலிடம் பெற வேண்டுமா?

ஆம். வகுப்பு வாரியாக கீழ் கண்ட மதிபெண்களை குறைந்தபட்சம் மாணவர்கள் எடுத்து இருந்தாலே போதும்.

Category – Minimum Marks

General  –  60%

OBC  –  55%

SC & ST  –  50%

7) மாணவருக்கு கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க பள்ளி உதவுமா?

மாணவருக்கு கல்விக் கடன் தொடர்பான ஆலோசனை வழங்கவும், விண்ணப்பிக்கவும் அந்தந்த பள்ளி உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம்.

8) கல்வி கடனிற்காக விண்ணப்பித்த பிறகு, எத்தனை நாட்களுக்குள் கல்வி கடன் வழங்கப்படும்? பொதுவான கால அவகாசம் என்ன?

கல்விக் கடன் உயர் அலுவலர் / வங்கி மேலாளர் ஒப்புதலுக்கு சுமார் 15 நாட்கள் ஆகும். அது ஒப்புதல் வழங்கப்பட்ட உடன், நீங்கள் கையொப்பமிட வேண்டிய உறுதிமொழி பத்திரத்தை பெறுவீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வங்கிகள் கல்வி நிறுவனத்திற்கு நேரடியாக கல்வி கடனை செலுத்துகின்றன.

9) கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க சரியான நேரம் எது?

மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான கடிதம் (ADMIT CARD) கிடைத்தவுடன், அருகாமையில் உள்ள வங்கியை அணுகலாம்.

10) கல்வி கடன் பெற தேவையான ஆவணங்கள் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாறுபடுமா?

பெரும்பாலும் இல்லை. .ஆனால்,விண்ணப்பதாரர் தேர்ந்தெடுத்த வங்கி மேலாளரிடம் ஒருமுறை உறுதி படுத்திக் கொள்ளவும்.

11) கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர் கல்லூரி சேர்க்கை உறுதிப்படுத்த வேண்டுமா?

ஆம். சேர்க்கைக்கான கடிதம் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

12) கல்விக் கடன் பெற தேவையான ஆவணங்கள் எவை?

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.

ஆதார் அட்டை

இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம் ஏதாவது ஒன்று

சாதி சான்றிதழ்

வருமானச் சான்றிதழ்

முதல் பட்டதாரி எனில் அதற்கான சான்றிதழ்

பான் கார்டு மாணவர் பெற்றோர் இருவருக்கும்

கல்லூரி அடையாள அட்டை, bonofide certficate

கல்லூரி வழங்கும் செலவினங்களுக்கான பட்டியல்

படிப்புக்கான செலவுகளின் அட்டவணை

உதவித்தொகையை உறுதிப்படுத்தும் கடிதத்தின் நகல்கள் போன்றவை

2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

பயனாளியின் கடைசி ஆறு மாதங்களுக்கான வங்கிக் கணக்கின் அறிக்கை (bank statement)

வருமான வரி சான்றிதழ் கடைசி இரண்டு ஆண்டுகள்

குடியிருப்பு சான்று

பான் கார்டு

ரூபாய் 4 லட்சத்திற்கு மேல் வாங்கினால் பிணைய ஆவணங்கள் (Collateral)

முதல் தலைமுறை சான்றிதழ் (கட்டாயம் இல்லை)

13) கல்விக் கடனில் உள்ளடங்கும் செலவுகள் என்ன?

கல்வி கட்டணம் மற்றும் விடுதி செலவுகள்

தேர்வு, நூலகம் மற்றும் ஆய்வகக் கட்டணம்

நிபந்தனைகளுடன் கூடிய வைப்புத்தொகைகள்

புத்தகங்கள், சீருடைகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் செலவு

பயண செலவுகள் (சர்வதேச விமானங்களுக்கான கட்டணம் உட்பட )

14) கல்வி கடன் விண்ணப்பதாரர் வித்யாலட்சுமி போர்ட்டல் மூலம் மட்டுமே கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?

ஆம்

15) கல்விக் கடன் பற்றிய தகவல்களை கண்டறிய நம்பகமான இணைய தளம் (PORJAL) எது?

வித்யா லட்சுமி இணைய தளம் (portal) மட்டுமே கல்வி கடனுக்கு பெறுவதற்கான அதிகாரப்பூர்வ தளம். அதன் இணைய முகவரி கீழே குறிப்பிட பட்டுள்ளது

(https://www.vidyalakshmi.co.in/Students/)

16) கல்விக் கடன் விண்ணப்பிக்க பொதுவான விண்ணப்ப படிவம் ஏதும் உள்ளதா?

ஆம். CELAF என்பது இந்திய வங்கிகள் சங்கத்தால் (IBA) பரிந்துரைத்த மற்றும் அனைத்து வங்கிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பப் படிவம் ஆகும்.

17) விண்ணப்பதாரர் கல்வி கடன் பெற குடும்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது கல்லூரி மூலம் விண்ணப்பிக்க வேண்டுமா?

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க வித்யா லட்சுமி இணையதளம் தான் அதிகாரபூர்வ இணையதளம். மாணவர் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

18) வித்யா லட்சமி இணையதளம் மூலம் கல்வி கடன் விண்ணப்பிக்க வங்கியை விண்ணப்பதாரர் எவ்வாறு தேர்வு செய்யலாம்?

விண்ணப்பதாரரின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வங்கி மற்றும் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் வங்கியை வித்யா லட்சமி இணையதளம் மூலம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம்

19) விண்ணப்பதாரர் வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா? அல்லது விண்ணப்பதாரரை வங்கி தேர்வு செய்யுமா?

விண்ணப்பத்தாரரே தங்களுக்கு விருப்பமான மூன்று வங்கிகளை வித்யா லட்சுமி இணையதளம் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலும், அவர் தேர்ந்தெடுக்கின்ற முதல் வங்கியே, கடனை வழங்கும். ஒருவேளை அந்த முதல் வங்கி கடனை நிராகரித்தால், இரண்டாம் வங்கியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

20) வித்யா லட்சுமி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர் வங்கி கிளைக்கு செல்ல வேண்டுமா?

இல்லை, ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் சரியான முறை ஆகும்.

21) வித்யா லட்சுமி இணையதளம் மூலம் எந்தெந்த வங்கிகளில் விண்ணப்பதாரர் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்?

மாணவர் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள மூன்று வங்கிகளை வித்யா லட்சுமி இணையதளம் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

22) ஒரு விண்ணப்பத்தின் மூலம் எத்தனை வங்கிகளில் கல்வி கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்?

ஒரு முறை மட்டுமே வித்யா லட்சுமி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும். ஆனால் பயனாளி மூன்று வங்கிகள் வரை தேர்வு செய்து கொள்ளலாம்.

23) வித்யா லட்சுமி இணைய தளத்தில் கல்வி கடன் பெற தகுதி வரம்புகள் என்ன?

பெற்றோரின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ 4 / 5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) அல்லது மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களால் (CFTIs) அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப / தொழில்முறை திட்டங்களில் மட்டுமே தொழில்நுட்ப அல்லது தொழில்முறை படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன்களைப் பெற முடியும்.

கல்விக் கடன்கள் இந்திய வங்கிச் சங்கத்தின் (IBA) மாதிரிக் கல்விக் கடன் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட வேண்டும்

மாணவர்கள் பட்டப்படிப்பு (யுஜி), முதுநிலைப் பட்டப்படிப்பு (பிஜி) அல்லது ஒருங்கிணைந்த படிப்புகளுக்கு ஒருமுறை மட்டுமே கடனைப் பெற முடியும்.

கல்விக் கடனுக்கான வட்டி விகிதங்கள் தனிப்பட்ட வங்கிகளின் அடிப்படை விகிதத்தின்படி வசூலிக்கப்படும்.

24) கல்வி கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு, வித்யா லட்சுமி இணைய தளத்தில் விவரங்களை மீண்டும் சரி செய்ய முடியுமா?

கல்வி கடன் விண்ணப்பப் படிவத்தைத் திருத்தவும், அதே திட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்கவும், வித்யா லட்சுமி இணைய தளத்தில் உங்கள் விண்ணப்பங்களை நிறைவு செய்ய / நிராகரிக்க (close / reject) விண்ணப்பித்த அனைத்து வங்கிகளையும் தொடர்பு கொள்ளுங்கள் . அதன் மூலம் நீங்கள் விண்ணப்பத்தை திருத்திக் கொண்டு மீண்டும் சமர்ப்பிக்கலாம்.

25) கல்விக் கடனுக்கு இணை விண்ணப்பதாரர் தேவையா?

ஆம், அனைத்து முழுநேர படிப்புகளுக்கும் இணை விண்ணப்பதாரர் தேவை. இணை விண்ணப்பதாரர் பெற்றோர் / பாதுகாவலர் அல்லது மனைவியாக / கணவனாக இருக்கலாம் (திருமணமானவராக இருந்தால்).

26) கல்விக்கடன் பெற விண்ணப்பதாரருக்கு கடன் அளவில் ஏதேனும் உச்சவரம்பு உள்ளதா?

பெரும்பாலான வங்கிகள் இந்தியாவில் படிப்பதற்கான கடன் அளவில் உச்சவரம்பாக ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையும், வெளிநாட்டுப் படிப்புகளுக்கு உச்சவரம்பாக ரூ. 20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை கல்வி கடன் வழங்கபடும். சில வங்கிகள் பிணையம் (Collatral) வழங்கப்பட்டால், விண்ணப்பதாரர் அதிக கல்வி கடன் தொகையைப் பெறலாம்.

27) கல்விக் கடன் திரும்ப செலுத்துவதற்கான பொதுவான கால அவகாசம் என்ன?

பெரும்பாலான வங்கிகளில் கல்விக் கடன் திரும்ப செலுத்துவதற்கான சராசரி கால அவகாசம் 5 முதல் 7 ஆண்டுகள் வழங்கப்படும். இருப்பினும், சில வங்கிகளில் அதிக கடன் தொகையை கல்வி கடனாக வழங்கி இருக்கும் பட்சத்தில் 15 ஆண்டுகள் வரை கால நீட்டிப்பு வழங்கப்படும்.

28) கல்விக் கடனுடன் காப்பீட்டை (insurance policy) வங்கிகள் வழங்குவது கட்டாயமா?

வங்கிகள் காப்பீட்டை (insurance policy) கட்டாயமாக கல்வி கடனில் சேர்த்து வழங்கிவிடும். எதிர்பாராத விதமாக பயனாளிகள் மரணம் அடைந்தால், வங்கி மாணவர்களின் ஆயுள் காப்பீட்டின் (insurance policy) மூலமாக கல்வி கடனாக வழங்கிய தொகையை மீட்டுக்கொள்ளும்.

29) கல்வி கடன் குறித்து முக்கியமாக தெரிந்து இருக்க வேண்டியவர்கள் யார்?

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (ngo ) மற்றும் தன்னார்வலர்கள் (volunteers)

30) கல்விக் கடன் பெறும் விண்ணப்பதாரரின் உதவித்தொகை பயனாளியின் சொந்த பங்களிப்பு (margin) பணமாக கருதப்படுமா?

ஆம், பெரும்பாலான வங்கிகள் மாணவர்களின் உதவித்தொகை அல்லது மானியங்களை கல்விக் கடனுக்கான பயனாளியின் சொந்த பங்களிப்பு (margin) பணமாகப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.

31) மாணவர்கள் கல்விக் கடன் பெற பாதுகாப்பு (Security) அல்லது பிணை (Collateral) தேவையா?

பிணையத்தின் (Collateral) தேவை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாறுபடும். இருப்பினும், பின்வருபவை பொதுவான விதிகள்:

ரூ. 4 லட்சம் வரை கல்வி கடன் பெறுவதற்கு பாதுகாப்பு (Security) அல்லது பிணை (Collateral) தேவையில்லை.

ரூ. 4 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரை கல்வி கடன் பெறுபவர்களுக்கு —  பிணையம் (Collateral) தேவையில்லை ஆனால் மூன்றாம் தரப்பு உத்தரவாதம் (3 rd party guarntee) தேவை.

ரூ. 7.5 லட்சம் மேல் உள்ள கல்வி கடன் பெறுபவர்களுக்கு கட்டாயமாக பிணையம் (Collateral) தேவை. வங்கிகளால் ஏற்றுக்கொள்ளப்படும் சில முக்கிய பிணைய வகைகளில் எல்ஐசி / என்எஸ்சி / கேவிபி, வங்கி வைத்திருக்கும் நிலையான வைப்பு (Fixed deposit), விண்ணப்பதாரர் அல்லது இணை கையொப்பமிட்டவருக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள் ஆகியவை அடங்கும்.

32) கல்விக் கடன் பெறும் பயனாளிகளுக்கு வருமான வரிச் சலுகைகள் உள்ளதா?

ஆம்.

வருமான வரிச் சட்டத்தின் 80 இ பிரிவின் கீழ் கல்வி கடன் பெறும் பயனாளிகளுக்கு வருமான வரிச் சலுகைகள் உள்ளது. கல்விக் கடனுக்கான வட்டியைச் செலுத்த தொடங்கிய உடனே, வருமான வரிச் சலுகைகளைப் பயனாளிகள் பெறலாம்.

33) மாணவர் எப்பொழுதிலிருந்து வங்கி கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும்?

மாணவர் கடன் பெற்ற அடுத்த மாதத்திலிருந்து வட்டி விகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே மாணவர்கள் தங்களின் வட்டித் தொகையை உடனே செலுத்த தொடங்கி விடலாம். உடனே செலுத்த தொடங்கியவர்களுக்கு 1/2 % வட்டி சலுகை உள்ளது.

34) தனிப்பட்ட காரணங்களுக்காக மாணவர் உயர்கல்வியை இடைநிற்றல் செய்தால் கல்வி கடன் என்ன ஆகும்?

மாணவர் உயர்கல்வியை இடைநிற்றல் செய்தால் உடனடியாக, மாணவர் வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். இடைநிற்றல் செய்யும் வரை பெற்றுள்ள அசல் மற்றும் அதற்கான வட்டியை கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும்.

35) ஒருவேளை மாணவர் உயர்கல்வி படிப்பை முடித்த பின்னர் வேலை கிடைக்கவில்லை என்றால் அவர் கல்வி கடனை செலுத்த வேண்டுமா?

உயர்கல்வி படிப்பை முடித்த பின்னர் மாணவருக்கு கல்வி கடன் செலுத்த ஒரு வருட கால அவகாசம் கிடைக்கும். ஒரு வருடம் முடிந்த பின்னர் வேலை கிடைக்காவிட்டாலும், மாணவர் கல்வி கடனை கட்டாயம் திரும்ப செலுத்த ஆரம்பிக்க வேண்டும்.

36) ஒருவேளை மாணவர் உயர்கல்வி படிப்பை முடித்து வேலைக்கு சென்று விட்ட பின்னரும் கல்வி கடன் திரும்ப செலுத்தவில்லை என்றால் அதற்கான விளைவுகள் என்ன?

மாணவர் உயர்கல்வி படிப்பை முடித்த பின்னரே கல்வி கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். எனவே திரும்ப செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் வட்டி விகிதம் மேலும் அதிகரிக்கும். ஆகவே படிப்பு முடிந்த உடன் கல்வி கடனை செலுத்துவதே சரியாக இருக்கும்.

37) கல்விக் கடன் பெறும் பயனாளிகளில் உள்ள ஆதி திராவிடர் / பழங்குடியினர் (SC / ST) மற்றும் சிறுபான்மையினர் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் உள்ளதா?

ஆம், இந்தியாவில் கல்விக் கடன்களைப் பெறும் ஆதி திராவிடர் / பழங்குடியின மற்றும் சிறுபான்மையினர் பிரிவில் உள்ள மாணவர்களுக்கு சில தளர்வுகள் உள்ளன. உதாரணமாக பயனாளியின் சொந்த பங்களிப்பு பணம் (margin) சில நேரங்களில் வழக்கமான சதவீதத்தை விட குறைவாகவோ அல்லது பூஜ்யமாக குறைக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வங்கி கிளையோ அல்லது வித்யா லட்சுமி இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

38) மாணவிகளுக்கென வழங்கப்படும் கல்வி கடனில் ஏதேனும் சலுகை உள்ளதா?

ஆம். மாணவிகளுக்கென வழங்கப்படும் கல்வி கடனில் 1/2 % வட்டி சலுகை உள்ளது.

39) கல்விக் கடன் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என்று ஏதேனும் சிறப்பு சலுகைகள் உள்ளதா?

கல்விக் கடன் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என்று தனியாக சிறப்பு சலுகைகள் எதுவும் இல்லை.

40) மாணவரின் தந்தை கையொப்பம் இட முடியாவிட்டால், தாய் கையொப்பம் இடலாமா? ஏதேனும் விதிவிலக்கு உள்ளதா?

மாணவரின் தந்தை உடல் நலம் முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது வெளிநாட்டில் இருந்தாலோ மாணவரின் தாய் கையொப்பம் இடலாம்.

41) விண்ணப்பதாரரின் உறவினர்கள் வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள் என்றால் கல்வி கடனைப் பெற அவரால் இணை விண்ணப்பதாரராக (co-applicant) இருக்க முடியுமா?

ஆம். அவருக்கு NRI வங்கி கணக்கு மற்றும் பிணையம் இந்தியாவில் இருந்தால் அவர் இணை கடன் வாங்குபவராக / உத்திரவாததாரராக இருக்கலாம். சில வங்கிகளில் கூடுதல் இணை கடன் வாங்குபவர் தேவை.

42) குடும்பம் இல்லாத சிறுவர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் படிக்கும் மாணவனுக்கு கல்வி கடன் கிடைக்குமா?

ஆம்.  குடும்பம் இல்லாத சிறுவர் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் படிக்கும் மாணவர்களின் பாதுகாவலர் (guardian) இணை கையொப்பமிடுவராக இருக்கலாம். அவருடைய ஆவணங்களை வைத்து கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

43) அகதிகள் முகாமில் உள்ள மாணவர்கள் கல்வி கடன் பெற தகுதி பெற முடியுமா?

இல்லை. அகதிகள் முகாமில் உள்ள மாணவர்கள் இந்தியாவின் குடிமக்களாக இல்லாததால், அவர்களால் கல்வி கடன் பெற முடியாது.

44) பெற்றோர் இல்லாமல் ஒரு மாணவர் கல்வி கடன் பெற முடியுமா?

பெறமுடியும். முழுநேரப் படிப்புகளைத் தொடரும் மாணவர்கள், பெற்றோர் / பாதுகாவலர் அல்லது மனைவி / கணவன் / துணைவரின் பெற்றோர்கள் (விண்ணப்பதாரர் திருமணமானவர்களாக இருக்கும் பட்சத்தில்) இணை விண்ணப்பதாரர் இருக்க வேண்டும். இணை விண்ணப்பதாரருக்கு வழக்கமான வருமான ஆதாரம் இருக்க வேண்டும்.

45) கல்விக் கடன் பெறும் பயனாளி ஒரு பெண் குழந்தை (Single Girl Child) பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் ஏதேனும் சிறப்பு சலுகைகள் உள்ளதா?

ஆம். வட்டியில் 0.5% சலுகை உண்டு.

46) வங்கியில் கல்விக் கடனுக்கான தகவலுக்கு விண்ணப்பதாரர் வங்கியில் யாரை அணுகலாம்?

வங்கி கிளை மேலாளரை அணுக வேண்டும்.

47) Lead Bank என்றால் என்ன?

ஒரு மாவட்டம் உருவாகும் போது அந்த மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் அதிக கிளைகள் கொண்ட வங்கியே அந்த மாவட்டத்தின் Lead Bank என்று அழைக்கப் படும்.

அனைத்து வித கடன் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகளில் Lead Bank ஈடுபடுகிறது.

48) லீட் வங்கி மேலாளரின் ( Lead Bank Manager ) தொடர்பு எண்ணை கல்வி கடன் பெறும் விண்ணப்பதாரர் எவ்வாறு பெறுவது?

உங்கள் வங்கி மேலாளரிடமிருந்து 1 லீட் வங்கி மேலாளரின் (Lead Bank Manager) பெற்றுக் கொள்ளலாம்.

49) கல்விக் கடன் பெறும் முதல் தலைமுறை மாணவர் பிரிவினருக்கு ஏதேனும் சிறப்பு சலுகைகள் உள்ளதா?

இல்லை. ஆனால் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை உள்ளது. மேலும் தகவலுக்கு கீழ் கண்ட இணைய தள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

https://static.tneaonline.org/docs/11_FG_PMSS_2022.pdf?t=1655596800022

50) கல்விக் கடன் பெற ஏதேனும் கட்டணங்கள் அல்லது செயலாக்க கட்டணம் (Processing fee) உள்ளதா?

இல்லை.

51) வங்கிகள் வட்டி இல்லாமல் கல்விக் கடன் வழங்குகின்றனவா?

இல்லை.

52) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் என்ன?

கல்வி கடனுக்கான வட்டி விகிதம ஆண்டுக்கு 11.15% முதல் 12.40% வரை வழங்கப்படுகிறது. இது வங்கிக்கு வங்கி சிறிது மாறுபடும். சரியான தகவல்களுக்கு பயனாளி கல்வி கடன் பெற்ற வங்கியை அணுகவும்.

53) கல்வி கடனுக்கு வட்டி விகிதக் கணக்கீடு எப்போது தொடங்கும்?

கடன் வழங்கப்பட்ட அடுத்த மாதத்திலிருந்து வட்டி விகித கணக்கீடு தொடங்கி விடும்.

54) கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடுமா அல்லது சீராக ஒரே வட்டி விகிதமாக இருக்குமா?

கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும்.

55) கல்வி கடன் விண்ணப்பிக்க, வங்கி கணக்கு கட்டாயம் வைத்து இருக்க வேண்டுமா?

அவசியம் இல்லை. விண்ணப்பதாரருக்கு கல்வி கடன் வாங்கும்போது வங்கி கணக்கையும் தொடங்கி கொள்ளலாம்.

56) கல்வி கடன் விண்ணப்பத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட (on hold ) நிலை என்றால் என்ன?

மாணவர் சமர்ப்பிக்க வேண்டிய கூடுதல் தகவல்கள் அல்லது ஆவணங்கள் வங்கிக்கு தேவைப்படும்போது, கல்வி கடன் விண்ணப்ப நிலையை நிறுத்தி வைப்பதாக வங்கி குறிப்பிடும். தேவைப்படும் கூடுதல் தகவல்கள் அல்லது ஆவணங்களை மாணவர்கள் வங்கியிலோ அல்லது வித்யாலட்சுமி இணையதளம் மூலமாகவோபதிவு செய்யலாம்.

57) கல்விக் கடனை நிராகரிப்பதற்கான பொதுவான காரணங்கள் என்ன?

நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்ணுக்கு கீழே மாணவர் மதிப்பெண் பெற்று இருந்தால், இது தொடர்பான தகவல் கீழே குறிப்பிட பட்டுள்ளது

இந்தியாவில் படிக்க:

Category – Minimum Marks

General – 60%

OBC – 55%

SC & ST – 50%

வெளிநாட்டில் படிக்க:

Category – Minimum Marks

General – 60%

OBC – 50%

SC & ST – 50%

 UGC / AICTE ஆல் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகத்தில் / கல்லூரியில் சேர்ந்தால்

விண்ணப்பத்தில் முழுமையான தகவல் இல்லாமை

இணை விண்ணப்பதாரரின் குறைந்த CIBIL Score இருந்தால்

58) வெவ்வேறு வங்கிகளின் கல்வி கடன் வட்டி விகிதங்களை எவ்வாறு அறிந்து கொள்வது?

அந்தந்த வங்கி கிளையின் மேலாளரை அணுகி அந்தந்த வங்கிகளின் கல்வி கடன் வட்டி விகிதங்களை பெற்றுக் கொள்ளலாம்.

59) விண்ணப்பதாரர் 12 ம் வகுப்பில் தோல்வி அடைந்து பிறகு மீண்டும் தேர்வை எழுதி உயர்கல்வி பயில கல்விக் கடன் பெற முடியுமா?

ஆம் பெற முடியும், மேலே குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று இருந்தால் விண்ணப்பதாரர் கல்வி கடன் பெற முடியும்.

60) கல்விக் கடன் பெறும் பயனாளி பகுதிக் கட்டணத்தை (partial fee) கடனாக பெற முடியுமா?

ஆம், நீங்கள் படிக்கும் போது எந்த நேரத்திலும் ஒரு பகுதி கட்டணத்தை கடனாக பெறலாம்.

61) 2 வது / 3 வது / 4 வது ஆண்டில் மாணவர் நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறார் எனில் அவர் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற முடியுமா?

அவர் கண்டிப்பாக விண்ணப்பிக்கலாம்.

62) விண்ணப்பதாரர் படிப்புக்குப் பிறகு திருமணம் செய்து கொண்டாலோ அல்லது வேலை செய்யத் திட்டமிடவில்லை என்றாலோ, வங்கி கல்வி கடனை தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதா?

இல்லை. அவர் கட்டாயமாக செலுத்த வேண்டும்.

63) கல்வி கடன் ஒப்புதலுக்குப் (approval) பிறகு பயனாளி கடனை ரத்து செய்ய முடியுமா?

கல்வி கடன் வங்கியால் பயனாளிக்கு ஒப்புதல் அளித்து விட்டு கட்டண தொகை செலுத்தப்பட்டுவிட்டால், ரத்து செய்ய முடியாது.

64) கல்வி செலவினங்களுக்காக பயனாளி கடன் பெறுவதற்கு முன்பே ஏற்கனவே செய்த செலவை திரும்பப் பெற முடியுமா?

இரண்டாம் செமஸ்டர் தேர்வுக்குள் வங்கி கடன் வந்து விட்டால், முதல் செமஸ்டர் கட்டணத்தை வங்கியிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

65) கல்விக் கடன்களின் வகைகள் என்ன?

இளங்கலை கல்வி கடன்கள்

தொழில் வல்லுநர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு கல்விக் கடன்கள்

தொழில் கல்வி கடன்

66) மாணவர் இளங்கலை படிப்பு கல்வி கடன் மூலம் படித்து விட்டு, உடனடியாக முதுகலை பட்டம் கல்வி கடன் எடுத்து படிக்க விரும்புகிறார்? அவருக்கு முதுகலைக்கும் கல்விக்கடன் கிடைக்குமா?

ஆம். அவர் இளங்கலைக் கல்வி கடன் பெற்ற வங்கியிலே திரும்ப பெற அணுக வேண்டும்.

67) ஒரே குடும்பத்தில் இருந்து எத்தனை பேர் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்?

இதற்கு வரம்பு இல்லை. ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

68) கல்விக் கடன்களுக்கான EMI எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

EMI என்பது சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது:

EMI = ( P x R x (1 + R)^N ) / ( (1 + R)^N – 1 ), இதில் P என்பது அசல் கடன், R என்பது மாதாந்திர வட்டி விகிதம், மற்றும் N என்பது மாதாந்திர தவணைகளின் எண்ணிக்கை.

69) EMI என்றால் என்ன?

EMI தொகை என்பது மாதாந்திர திருப்பிச் செலுத்துவதற்கான நிலையான தொகையாகும்.

70) கல்வி கடனுக்கு விண்ணப்பிக்க பான் கார்டு (Pan card) கட்டாயமா?

ஆம். அனைத்து வரி செலுத்துவோரும் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது கட்டாயம். பொதுவாக, 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் வழக்கமான செயல்முறையின் மூலம் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோர் / பாதுகாவலர் மூலமாக இளவர் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

71) பெற்றோருக்கு இது வரை CIBIL (Credit Information Bureau (India) Limited) மற்றும் கடன் வரலாறு இல்லை என்றால் மாணவருக்கு கல்வி கடன் கிடைக்குமா?

ஆம். ஆனால், அவருக்கு கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாத வரலாறு மட்டும் இருக்கக்கூடாது.

72) மாணவர் சென்னையில் வசித்து வருகிறார். அவர் 7.5 லட்சத்திற்கு மேல் கல்வி கடன் வாங்க திட்டமிட்டு உள்ளார். அவரின் பெற்றோரின் சொத்து திருநெல்வேலியில் உள்ளது. அவர் எந்த மாவட்டத்தில் கடன் பெறலாம்?

மாணவர் சென்னையில் தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள வங்கியில் வங்கி கடன் பெற்றுக் கொள்ளலாம்.

73) முதன்மை கல்வி நிறுவனங்களில் ( Premier Institutes ) கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிக்கும் மாணவர் கல்வி கடன் பெற முடியுமா?

ஆம், முதன்மை கல்வி நிறுவனங்களில் ( Premier Institutes ) கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிக்கும் மாணவர் கடன் பெற முடியும்.

74) MBBS படிப்பில் முதலாம் ஆண்டு தேர்ச்சி பெறவில்லை என்றால், அடுத்த ஆண்டிற்கு கல்வி கடன் கிடைக்குமா?

இல்லை.

75) நீட் போன்ற தனியார் பயிற்சி வகுப்புகளும் கல்வி கடன் பெற தகுதியானதா?

இல்லை.

76) பயனாளி அதே வங்கி கிளையில் வங்கி கணக்கு வைத்திருந்தால் கல்வி கடன் வாங்குவதில் ஏதேனும் சிறப்புச் சலுகை உள்ளதா?

இல்லை.

77) கல்வி கடன் வாங்க சிறந்த வங்கி (அரசு அல்லது தனியார்) எது?

இரண்டும் கல்வி கடனுக்கு உகந்தது தான்.

78) கல்விக் கடனுக்கான வட்டியில் மானியத்தை (subsidy) பயனாளி பெற முடியுமா?

ஆம். வங்கி கடன் தொகைக்கு சேர்ந்து விடும்.

79) கல்விக் கடன் பெற்ற பயனாளி படிப்பின்போதே கடனுக்கான வட்டியை செலுத்த வேண்டுமா?

வட்டியை செலுத்த முடிந்தால், செலுத்த தொடங்கி விடலாம்.

80) கல்விக் கடன் பெறும் பயனாளி வெவ்வேறு வங்கிகளில் இரண்டு கல்விக் கடன்களை ஒரே சமயத்தில் பெற முடியுமா?

பெற முடியவே  முடியாது.

81) கல்வி கடன் பெறும் விண்ணப்பதாரருக்கு வங்கி கல்வி கடனை நேரடியாக பயனாளிக்கு அனுப்புமா அல்லது கல்லூரிக்கு அனுப்புமா?

கல்லூரிக்கு செலுத்தி விடும்.

82) வங்கிகளில் கல்விக் கடன்களை பற்றி ஆலோசனை செய்ய / தெரிந்து கொள்ள ஏதேனும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதா?

அப்படி ஏதும் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் அணுகலாம்.

83) தொழில் படிப்புகள் கல்விக் கடனுக்கு தகுதியானதா?

ஆம்

84) நர்சிங் படிப்புக்கு கல்விக் கடன் உள்ளதா?

ஆம்.

85) நர்சிங் படிப்பிற்கான கல்வி கடன் பெற தகுதி வரம்பு என்ன?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரியில் பட்டம் / டிப்ளமோ படிப்புக்கான அனுமதி / அழைப்பு கடிதம்.

இளங்கலைப் படிப்பிற்கு, 10 + 2 (12  ஆம் வகுப்பு) மற்றும் முதுகலைப் படிப்பிற்குப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

யுஜிசி / அரசு / ஏஐசிடிஇ / ஏஐபிஎம்எஸ் / சிஎம்ஆர் – ஆல் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கங்களில் பட்டதாரி / முதுகலை பட்டப்படிப்புகள்

Leave a Comment