TNPSC Tamil – 2023 Questions

TNPSC Tamil – 2023 Questions

TNPSC Tamil – 2023 Questions – COMBINED LIBRARY EXAMINATION IN TAMIL NADU STATE AND SUBORDINATE SERVICES EXAM.
DOE : 13/05/2023 FN & AN AND 14/05/2023 FN

COMPUTER BASED TEST – 2023

PAPER – II  / தாள் – II

COMPULSORY TAMIL LANGUAGE ELIGIBILITY TEST (SSLC standard) and GENERAL STUDIES (Degree standard)

கட்டாய தமிழ்மொழித் தகுதித் தேர்வு (பத்தாம் வகுப்பு தரம்) மற்றும் பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

பகுதி-அ (தமிழ் தகுதி தேர்வு)

Part – A  (Tamil Eligibility Test)

வினாக்கள்: 1 – 100

TNPSC Tamil – 2023 Questions: 1 – 100

1) “தொட்டு” – வேர்ச்சொல்லைத் தருக.

(A) தொண்

(B) ஒடு

(C) தொட்டு

(D) தொடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

2) வேர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்தெழுதுக.

பயின்றாள் ___________________

(A) பயின்று

(B) பயின்ற

(C) பயில்

(D) பயில

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

3) ‘வருக’ –  என்பதன் வேர்ச்சொல் தருக.

(A) வரு

(B) வாரு

(C) வா

(D) வந்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

4) ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கும்’ என்று உரைப்பது, ______________ விடை ஆகும்.

(A) உற்றது உரைத்தல் விடை

(B) நேர் விடை

(C) உறுவது கூறல் விடை

(D) இனமொழி விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

5) தாவரத்தின் பிஞ்சு வகைகளுள் இடம்பெறாத சொல் தேர்க.

(A) வடு

(B) மூசு

(C) கவ்வை

(D) தாறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

6) ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

கடி

(A) உலகம், பார்த்தல்

(B) காவல், விரைவாக

(C) காற்று, கவனித்தல்

(D) விரைவாக, மெதுவாக

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

7) குரங்கு –  குறங்கு – ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிக.

(A) வானரம் –  வளைவு

(B) வானரம்  –  தொடை

(C) விலங்கு –  வானரம்

(D) விலங்கு –  வளைவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

8) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க :

கூரை  –  கூறை

(A) வீட்டின் கூரை  –  விரும்பு

(B) வீட்டின் கூரை –  புடவை

(C) வீட்டின் மேல்  –  நண்டு

(D) வீட்டின் மேல்  –  மதிப்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

9) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.

சரியான இணையைத் தேர்க.

(A) ஈ-காமர்ஸ்                –     மின்னணு மயம்

(B) ஆன்லைன் ஷாப்பிங்     –     மின்னணு வணிகம்

(C) டிமாண்ட்டிராஃப்ட்        –     வரைவோலை

(D) டிஜிட்டல்                 –     இணையத்தள வணிகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

10)  ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தருக.

Tempest

(A) புயல்

(B) சூறாவளி

(C) நிலக்காற்று

(D) பெருங்காற்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

11) Revivalism – என்ற சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.

(A) மறுமலர்ச்சி

(B) காப்புரிமை

(C) நம்பிக்கை

(D) மீட்டுருவாக்கம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

12)  பிழையான தொடரைக் கண்டறிக.

(A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.

(B) மலை மீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

(C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.

(D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

13) பிழை நீக்கி எழுதுக.

சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தி கொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

(A) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திக் கொண்டுதான் தௌலீஸ்வரம் ஆணையைக் கட்டினார்.

(B) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தியால் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

(C) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

(D) சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திக்கு தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

14) சரியான ஒலி மரபைக் கண்டறிக.

சிங்கம்

(A) உறுமும்

(B) முழங்கும்

(C) கதறும்

(D) கத்தும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

15) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்

கவிஞர் அப்துல்ரகுமான்

(A) பால்வீதி

(B) கரித்துண்டு

(C) நேயர்விருப்பம்

(D) சொந்தச்சிறைகள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

16) தென்திராவிட மொழிக் குடும்பத்திற்குப் பொருந்தாதது கண்டறிக.

(A) தமிழ்

(B) மலையாளம்

(C) தெலுங்கு

(D) கன்னடம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

17) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

ஊறுகாய், கருங்குவளை, ஆடுகொடி, வளர்தமிழ்

(A) வளர்தமிழ்

(B) ஊறுகாய்

(C) ஆடுகொடி

(D) கருங்குவளை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

18) செய்யுளிசை அளபெடைக்குப் பொருந்தாத சொல்லைத் தேர்க.

(A) ஓஒதல்

(B) படாஅ

(C) படூஉம்

(D) இன்புறூஉம்

(E) விடை தெரியவில்லை.

ANSWER KEY: D

19) சரியான இணையைத் தேர்க.

(A) அணுகு –  பொய்மை

(B) ஐயம்  –  தெளிவு

(C) ஊக்கம் – விலகு

(D) உண்மை –  சோர்வு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

20) எதிர்ச்சொல்

“மிசை” என்பதன் எதிர்ச்சொல் என்ன?

(A) கீழே

(B) மேலே

(C) இசை

(D) வசை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

21) ஈதல் – என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எழுதுக.

(A) அளித்தல்

(B) கொடுத்தல்

(C) வழங்குதல்

(D) ஏற்றல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

22) “பொருளுடைமை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

(A) பொருளு + டைமை

(B) பொரு +  ளுடைமை

(C) பொருள் + உடைமை

(D) பொருள் + ளுடைமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

23) சேர்த்தெழுதுக : இன்பு +  உருகு

(A) இன்புஉருகு

(B) இன்பும்உருகு

(C) இன்புருகு

(D) இன்பருகு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

24) பிரித்தெழுதுக.

பெருங்கடல்

(A) பெரிய +  கடல்

(B) பெரு + கடல்

(C) பெருங் +  கடல்

(D) பெருமை + கடல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையைத் தேர்ந்தெடு :

விரிவான கருத்தைச் சுருக்கிச் சொல்வதே பழமொழியின் சிறப்பு. சான்றாக சுத்தம் சோறு போடும் என்னும் பழமொழி தரும் பொருளைக் காண்போம். சுத்தம் நோயற்ற வாழ்வைத் தரும். உடல் ஆரோக்கியமே உழைப்புக்கு அடிப்படை. உழைத்துத் தேடிய பொருளால் உணவு. உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுகிறோம். இவை அனைத்திற்கும் சுத்தமே அடிப்படை. இவ்விரிந்த கருத்து சிறு அடிக்குள் அடங்கியுள்ளது.

25) பழமொழியின் சிறப்பு ________________ சொல்வது

(A) விரிவாகச்

(B) சுருங்கச்

(C) பழைமையைச்

(D) பல மொழிகளில்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

26) நோயற்ற வாழ்வைத் தருவது

(A) சுத்தம்

(B) அசுத்தம்

(C) மருந்து

(D) உணவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

27) உடல் ஆரோக்கியமே _____________ அடிப்படை.

(A) சோம்பல்

(B) சுறுசுறுப்பு

(C) முயற்சி

(D) உழைப்புக்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

28) உழைத்துத் தேடிய பொருளால் நாம் பெறுவன

(A) உணவு, உடை, உறைவிடம்

(B) வீடு, நாடு, காடு

(C) மருந்து, இனிப்பு, காரம்

(D) உடை, காடு, மருந்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

29) இப்பத்தியில் இடம் பெறும் பழமொழி

(A) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

(B) யானைக்கும் அடி சறுக்கும்

(C) சுத்தம் சோறு போடும்

(D) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

30) ஒருமை – பன்மை பிழையான தொடரை நீக்குக.

(A) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்

(B) சிறுமி தனது கையில் புத்தகம் வைத்திருந்தாள்

(C) கன்று தனது தலையை ஆட்டியது

(D) இவை தான் எனக்குப் பிடித்த நூல்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

31) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(A) அவன் நெறியோடு நின்று காவல் காக்கின்றான்

(B) அவன் நெறியோடு நின்று காவல் காக்கிறார்கள்

(C) அவர்கள் நெறியோடு நின்று காவல் காக்கிறார்

(D) அவன் நெறியோடு நின்று காவல் காக்கிறார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

32) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்க

(A) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தோம்

(B) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தேன்

(C) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்கள்

(D) என் தந்தை என்னைக் கையோடு அழைத்துக்கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

33) சொல் – பொருள் – பொருத்துக

(a) புரிசை  1. சாளரம்

(b) புழை    2. நீர்நிலை

(c) பனை   3. மதில்

(d) கயம்    4. முரசு

(a)           (b)           (c)            (d)

(A)          3              1              4              2

(B)          3              2              1              4

(C)          2              3              4              1

(D)          4              1              2              3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

34) சொல்லும் – பொருளும் தவறான இணையைக் கண்டறிக

(A) மேதி – மயில்

(B) மா – வண்டு

(C) மது – தேன்

(D) வாவி – பொய்கை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

35) சொல் – பொருள் – பொருத்துக

(a) அலந்தவர்    1. உறவினர்

(b) நோன்றல்     2. வறியவர்

(c) கிளை         3. பகைவர்

(d) போற்றார்     4. பொறுத்தல்

(a)           (b)           (c)            (d)

(A)          4              3              1              2

(B)          3              4              2              1

(C)          2              4              1              3

(D)          2              1              4              3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

36) கீழ்காணும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக.

அது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

(A) அஃது இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

(B) நடக்காது எதுவும் இல்லாத இடத்தில்

(C) ஒரு இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

(D) ஓர் இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

37) பிழை திருத்துதல் (ஒரு – ஓர்)

கீழ்க்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடர் எது ?

(A) ஓர் புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்

(B) ஓர் புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஒரு அனுபவத்தைத் தொடுவாய்

(C) ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஓர் அனுபவத்தைத் தொடுவாய்

(D) ஒரு புத்தகத்தைத் தொடுகிறபோது நீ ஒரு அனுபவத்தைத் தொடுவாய்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

38 )சரியானத் தொடரைத் தேர்ந்தெடு :

கவிதையை எழுதினார் – இது எவ்வகைத் தொடர்?

(A) உரிச்சொல் தொடர்

(B) எழுவாய்த் தொடர்

(C) வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

(D) இடைச்சொல் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

39) சரியானத் தொடரைக் கண்டறிந்து எழுதுக.

(A) விடியற்காலையில் கோழி கூவியது

(B) கொடியிலுள்ள மலரைக் கொய்து வா

(C) நேற்று சுழல்காற்று அடித்தது

(D) என் வீட்டில் புதிதாக கூரை போட்டனர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

40) பூக்களைப் பறிக்காதீர் – இது எவ்வகைத் தொடர்.

(A) வினாத் தொடர்

(B) உணர்ச்சித் தொடர்

(C) கட்டளைத் தொடர்

(D) செய்தித் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

41) பின்வரும் சொல்லின் சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க.

எறும்பு.

(A) எறும்பு மந்தை

(B) எறும்பு குவியல்

(C) எறும்புக் கூட்டம்

(D) எறும்புச் சாரை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

42) சொற்களின் கூட்டு பெயர்களில் தவறான இணையைக் கண்டறிக.

(A) மக்கள் கூட்டம்

(B) ஆநிரை

(C) ஆட்டுக்கூட்டம்

(D) தென்னந்தோப்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

43) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்.

(A) கரிப்பு மணிகள்

(B) குறிஞ்சித்தேன்

(C) சேற்றில் மனிதர்கள்

(D) வேருக்கு நீர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

44) சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் அமைந்திருப்பது.

(A) மலர்க்கை

(B) தேர்பாகன்

(C) கொல்களிறு

(D) சாரைப்பாம்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

45) காலம் கரந்த பெயரெச்சம் எது?

(A) வினையெச்சம்

(B) வினைத்தொகை

(C) வேற்றுமைத்தொகை

(D) பண்புத்தொகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

46) கலைச் சொல் அறிதல்

WHIRLWIND

(A) சுழல்காற்று

(B) நிலக்காற்று

(C) கடற்காற்று

(D) பெருங்காற்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

47) கொடுக்கப்பட்டுள்ள கலைச்சொல்லின் பொருளை அறிந்து தெரிவு செய்க.

Marine creature.

(A) கப்பல் தொழில்நுட்பம்

(B) கடல்வாழ் உயிரினம்

(C) நிலவாழ் உயிரினம்

 (D) நீர்வாழ் உயிரினம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

48) கூற்று, காரணம் – சரியா? தவறா ?

கூற்று     : ‘என் அம்மை வந்தாள்’ என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும்.

காரணம்   : உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

(A) கூற்று சரி, காரணம் சரி

(B) கூற்று சரி, காரணம் தவறு

(C) கூற்று தவறு, காரணம் சரி

(D) கூற்று தவறு, காரணம் தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

49) கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று     : தாய்சேய் – உவமைத்தொகை

காரணம்   : உவம உருபு மறைந்து வந்துள்ளது.

(A) கூற்று சரி, காரணம் தவறு

(B) கூற்றும் காரணமும் சரி

(C) கூற்றும் காரணமும் தவறு

(D) கூற்று தவறு,  காரணம் சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

50) கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று              : “மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது” என்று சர்ச்சில் கூறினார்.

காரணம்        : தமிழ் மக்களின் துணையுடன் போராடிய நேதாஜியைக் கொண்டு சர்ச்சில் கோபம் கொண்டார்.

(A) கூற்றும் காரணமும் சரி

(B) கூற்று சரி, காரணம் தவறு

(C) காரணம் சரி, கூற்று தவறு

(D) கூற்று, காரணம் இரண்டும் தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

51) இரு பொருள் தருக

இதழ்

(A) கீற்று, கயிறு

(B) நாளிதழ், கீற்று

(C) கண் இமை, உதடு

(D) பூவின் இதழ், கயிறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

52) விடை வகையைத் தேர்ந்தெழுதுதல்

“நீ விளையாடவில்லையா?” என்ற வினாவிற்கு “உடம்பு சரியில்லை”. என்று கூறுவது.

(A) உற்றது உரைத்தல் விடை

(B) உறுவது கூறல் விடை

(C) ஏவல் விடை

(D) இனமொழி விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

53) அவசரக் குடுக்கை என்ற உவமையின் பொருளை எழுதுக.

(A) விரைந்து வெளியேறுதல்

(B) இயலாத செயல்

(C) எண்ணி செயல்படாமை

(D) நீண்டகாலமாக இருப்பது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

54) இருபொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு.

ஆறு

(A) நகை, நதி

(B) நதி, உவகை

(C) நதி, எண்

(D) எண், அணி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

55) “எனக்கு எழுதித் தருகிறாயா?” என்ற வினாவிற்கு “எனக்கு யார் எழுதித் தருவார்கள்?” என்று விடையளிப்பது

(A) இனமொழி விடை

(B) உறுவது கூறல் விடை

(C) உற்றது உரைத்தல் விடை

(D) வினா எதிர் வினாதல் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

56) சரியான விடைவகையை தெரிவு செய்க.

இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டதற்கு, “அதோ, அங்கு நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ____________ விடை.

(A) சுட்டு விடை

(B) மறை விடை

(C) இனமொழி விடை

(D) ஏவல் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

57) எவ்வகை வினா என்பதை எழுதுக.

‘வீட்டில் தக்காளி இல்லை. நீ கடைக்குச் செல்கிறாயா?’ என்று அக்கா தம்பியிடம் வினவிச் சொல்லுதல்.

(A) கொளல் வினா

(B) ஏவல் வினா

(C) கொடை வினா

(D) ஐய வினா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

58) அலுவல் சார்ந்த கலைச் சொற்களுக்குத் தமிழாக்கம் அறிக.

ரெக்கார்ட்.

(A) கோப்பு

(B) ஒப்புச்சீட்டு

(C) கருத்துரு

(D) ஆவணம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

59) Honorary Doctorate – என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் தேர்க.

(A) முனைவர்

(B) நல்முனைவர்

(C) மதிப்புறு முனைவர்

(D) சிறப்புறு முனைவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

60) ‘AUDITOR’ – என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.

(A) வணிகர்

(B) கணித ஆசிரியர்

(C) பட்டயக் கணக்கர்

(D) சீர்திருத்தவாதி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

61) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்:

“காக்கை உட்காரப் பணம்பழம் விழுந்ததுபோல”

(A) வெளிப்படைத் தன்மை

(B) பயனற்ற செயல்

(C) ஒற்றுமையின்மை

(D) தற்செயல் நிகழ்வு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

62) கலைச்சொல் அறிக.

Missile

(A) கடல் மைல்

(B) பதிவிறக்கம்

(C) ஏவுகணை

(D) ஏவு ஊர்தி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

63) ‘பசுமரத்து ஆணி போல’ என்ற உவமைக்குப் பொருத்தமான பொருள் யாது?

(A) பயனற்ற செயல்

(B) தற்செயல் நிகழ்வு

(C) எதிர்பாரா நிகழ்வு

(D) எளிதில் மனதில் பதிதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

64) பந்து உருண்டது – இது எவ்வகை வாக்கியம் ?

(A) பிறவினை

(B) செயப்பாட்டு வினை

(C) எதிர்மறை வினை

(D) தன்வினை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

65) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

“பணம் திருடப்பட்டது.”

(A) தன் வினை

(B) பிற வினை

(C) செயப்பாட்டு வினை

(D) செய்வினை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

66) தொடர்வகை அறிந்து சரியான விடையைத் தேர்க.

உன் திருக்குறள் நூலைத் தருக.

(A) வினாத் தொடர்

(B) விழைவுத் தொடர்

(C) செய்தித் தொடர்

(D) உணர்ச்சித் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

67) திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூலாகும் _____________

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

(A) திருக்குறள் சிறந்த நூலா?

(B) திருக்குறள் உலகின் எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ?

(C) திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூலாகுமா?

(D) உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் எது ?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

68) விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

விடை :  பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.

(A) பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?

(B) பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?

(C) பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?

(D) பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது ?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

69) இருவினைகளின் பொருளறிந்து சரியான தொடரை தெரிவு செய்க.

பொருந்து – பொருத்து

(A) மின் விசிறி பொருத்தி சரியாக பொருந்தி உள்ளதா? என்று கவனி.

(B) மின்விசிறி சரியாக பொருந்தி உள்ளதா? என்று பொருத்தி கவனி.

(C) மின்விசிறி சரியாக பொருத்தி, பொருந்தி உள்ளதா? கவனி என்று.

(D) மின்விசிறி சரியாக பொருந்தி உள்ளதா? கவனி என்று பொருத்தி.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

70) பொருத்தமான இணைகளை தேர்க (பிணைந்து – பிணைத்து)

(I) பாம்புகள் பிணைந்தன

(II) பாம்புகள் பிணைத்தன

(III) தாம்புகள் பிணைந்தன

(IV) தாம்புகள் பிணைத்தன

(A) I மற்றும் II சரி

(B) II மற்றும் III சரி

(C) III மற்றும் IV சரி

(D) I மற்றும் IV சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

71) சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) கவிதை கூறுவது உணர்ந்தபடி உள்ளதை

(B) உணர்ந்தபடி உள்ளதைக் கவிதை கூறுவது

(C) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது கவிதை

(D) கவிதை உணர்ந்தபடி உள்ளதைக் கூறுவது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

72) முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக

(A) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறு தழுவுதல்

(B) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான

(C) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

(D) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

73) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

விளையும் உப்பு “அளம்” களத்திற்கு என்று பெயர்.

(A) விளையும் என்று பெயர் “அளம்” களத்திற்கு உப்பு

(B) உப்பு விளையும் களத்திற்கு “அளம்” என்று பெயர்

(C) என்று பெயர் “அளம்’ களத்திற்கு உப்பு விளையும்

(D) ”அளம்” என்று பெயர் உப்பு விளையும் களத்திற்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

74) அகர வரிசைப்படுத்துக:-

எழுத்து, ஒலிவடிவம், அழுகுணர்ச்சி, ஏழ்கடல், ஊழி, இரண்டல்ல, உரைநடை, ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம், ஒளகாரம்

(A) உரைநடை, எழுத்து, ஏழ்கடல், ஒலிவடிவம், ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஊழி, இரண்டல்ல, ஈசன், ஆரம்நீ, அழுகுணர்ச்சி, ஐயம்

(B) இரண்டல்ல, அழகுணர்ச்சி, ஆரம்நீ, ஈசன், உரைநடை, ஊழி, ஏழ்கடல், எழுத்து, ஒலிவடிவம், ஐயம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்

(C) அழுகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஒளகாரம்

(D) இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், அழகுணர்ச்சி, ஆரம்நீ, ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஔகாரம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

75) கீழ்க்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமைத்து எழுதுக.

வைதல், வாழ்த்துதல், வேண்டுதல், வினாவுதல்

(A) வாழ்த்துதல், வினாவுதல், வைதல், வேண்டுதல்

(B) வாழ்த்துதல், வினாவுதல், வேண்டுதல், வைதல்

(C) வினாவுதல், வாழ்த்துதல், வைதல், வேண்டுதல்

(D) வினாவுதல், வைதல், வாழ்த்துதல், வேண்டுதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

76) அகர வரிசைப்படுத்துக.

(A) மரகதம் மாணிக்கம் கோமேதகம் முத்து

(B) கோமேதகம் முத்து மரகதம் மாணிக்கம்

(C) மரகதம் கோமேதகம், மாணிக்கம் முத்து

(D) கோமேதகம், மரகதம் மாணிக்கம் முத்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

77) “சரி” என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் தருக.

(A) சரிந்த

(B) சரிதல்

(C) சரிந்தனர்

(D) சரிந்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

78) வேர்ச்சொல்லின் வழி வினையெச்சம் கண்டறிக.

பாடு _____________________

(A) பாடி

(B) பாடியவன்

(C) பாடிய

(D) பாட்டு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

79) அடைப்புக்குள் உள்ள சொல்லை ஏற்ற தொடரில் சேர்க்க (திருவெஃகா)

(A) நம்மாழ்வார் ____________ என்னும் ஊரில் பிறந்தார்

(B) பூதத்தாழ்வார் ____________ என்னும் ஊரில் பிறந்தார்

(C) பொய்கையாழ்வார் __________ என்னும் ஊரில் பிறந்தார்

(D) திருமூலர் _______________ என்னும் ஊரில் பிறந்தார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

80) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (பிப்ரவரி 2)

(A) உலக ஈர நில நாள் _________________

(B) உலக இயற்கை நாள் __________________

(C) உலக ஓசோன் நாள் _____________________

(D) உலக வனவிலங்கு நாள் _____________________

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

81) பொருத்தமான இணைப்புச்சொல் அமைந்தத் தொடரைத் தேர்க.

(A) தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்

(B) தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. ஆனால், தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்

(C) தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. அதுபோல தமிழ் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்

(D) தமிழ் மொழிதான் மிகப்பழமையான மொழி. ஏனெனில், தமிழ் மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

82) சரியான இணைச்சொல்லைத் தெரிவு செய்க.

“இந்த ஓவியத்தில் அமைதி எங்கே இருக்கிறது?” என்றார் அரசர். ______________________  ஓவியர் “மன்னா பிரச்சினையும் போராட்டமும் ஆரவாரமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அன்று” என்றான்.

(A) அவ்வாறு

(B) அப்படி

(C) அதனால்

(D) அதற்கு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

83) சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு

நோய்கள் பெருகக் காரணம் ________________?

(A) யாவை

(B) எவை

(C) யாவர்

(D) என்ன

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

84) சரியான வினாச்சொற்களை தேர்க

இயற்கையை ________________ பாதுகாக்க வேண்டும்?

(I) ஏன்

(II) எப்படி

(III) யார்

(IV) யாது

(A) I, II, III சரி

(B) I, III, IV சரி

(C) II, III, IV சரி

(D) I, II, IV சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

85) சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

முதல் ஆழ்வார்கள் _______________ பேர்?

(A) யார்

(B) எங்கு

(C) எத்தனை

(D) யாது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

86) பொருத்தமான காலம் அமைத்தல்

சரியான தொடரைத் தேர்ந்தெடு

(A) இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருந்தேன் (எதிர்காலம்)

(B) இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருப்பேன் (நிகழ்காலம்)

(C) இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருக்கின்றேன் (இறந்த காலம்)

(D) இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருக்கிறேன் (நிகழ்காலம்)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

87) காலத்திற்கேற்ப வினைமுற்றைத் தேர்க.

என் மாமா நாளை

(A) சென்றார்

(B) படித்தார்

(C) வருவார்

(D) வந்தார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

88) எதிர்காலத்தைக் குறிக்கும் தொடரைத் தேர்ந்தெடு.

(A) தவறு செய்தால் தண்டனைக் கிடைக்கும்

(B) தவறு செய்தால் தண்டனைக் கிடைத்தது

(C) தவறு செய்தால் தண்டனைக் கிடைக்கிறது

(D) தவறு செய்தால் தண்டனைக் கிடைத்து விடுகிறது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

89) சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குக.

மணி

(A) மேகலை

(B) வான்

(C) செய்

(D) பொன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

90) சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் உருவாக்குதல் பொருத்துக.

(a) வாழை        1. திடல்

(b) குருவி        2. சோறு

(c) தயிர்          3. கூடு

(d) விளையாட்டு 4. பழம்

(a)          (b)          (c)           (d)

(A)          3              4              2              1

(B)          4              3              1              2

(C)          4              3              2              1

(D)          2              3              4              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

91) வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க

இத்தொடருக்கு இணையான எழுத்து வழக்கைத் தேர்க.

(A) வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாருங்கள்

(B) வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுகிட்டு வாங்க

(C) வண்டியைத் தூக்கி மாட்டு வண்டியில் வச்சுகிட்டு வாருங்கள்

(D) வண்டியைத் தூக்கி மாட்டு வண்டியில் வைத்துக்கொண்டு வாருங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

92) பேச்சு வழக்கு அல்லாத தொடரைக் கண்டறிக.

(A) அவம் பாட்டியோட வெளியூர் போயிருக்கான்

(B) அவன் பாட்டியுடன் வெளியூர் போயிருக்கான்

(C) அவன் பாட்டியோட வெளியூர் போயிருக்கிறான்

(D) அவன் பாட்டியோடு வெளியூர் போயிருக்கிறான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

93) எழுத்து வழக்காக மாற்றுக

ரொம்பத் தொலவட்லயிருந்து வர்ரென்

(A) மிகுந்த தொலைவிலிருந்து வருகிறேன்

(B) மிகுதியான தூரத்திலிருந்து வருகிறேன்

(C) நீண்ட தொலைவிலிருந்து வருகிறேன்

(D) நீண்ட தூரத்திலிருந்து வருகிறேன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

94) நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)

(A) அந்தோ, இயற்கை அழிகிறதே?

(B) அந்தோ! இயற்கை அழிகிறதே!

(C) அந்தோ இயற்கை அழிகிறதே.

(D) அந்தோ இயற்கை, அழிகிறதே!

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

95) கொடுக்கப்பட்டுள்ள தொடரின் சரியான நிறுத்தற்குறி இடப்பட்டுள்ள தொடரை தெரிவு செய்க.

நீரோடையும் தாமரை மலர்களும் எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக என்றன.

(A) நீரோடையும் தாமரை மலர்களும் “எங்களைக் கவி ஒவியமாகத் தீட்டுக” என்றன

(B) நீரோடையும், தாமரை மலர்கலும் “எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக!” என்றன

(C) நீரோடையும், தாமரை மலர்களும் எங்களைக் கவி ஓவியமாக தீட்டுக! என்றன

(D) நீரோடையும், தாமரை மலர்களும் ‘எங்களைக் கவி ஓவியமாகத் தீட்டுக’ என்றன

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

96) ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக

கும்பகோணம்

(A) நெல்லை

(B) குடந்தை

(C) மயிலை

(D) திருச்சி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

97) பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க.

(A) மன்னார்குடி                      –  மன்னை

(B) உதகமண்டலம்     – உதகை

(C) புதுக்கோட்டை             – புதுவை

(D) திருச்சிராப்பள்ளி         – திருச்சி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

98) பிறமொழிக் கலப்பற்ற தொடரைத் தேர்க.

(A) செத்த பிணமாய் சீவனில்லாமல் உறக்கத்தில் வாழ்ந்தோம்

(B) சபதம் முடித்து ஆனந்த தரிசனம் அளித்து நின்றது.

(C) கைவிலங்கு ஒடித்து பகையைத் துடைத்தது சத்திய நெஞ்சம்

(D) விரட்டியடித்து விழிக்க வைத்தது; வையம் வியக்க வைத்தது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

99) ‘SAILOR’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல் தருக.

(A) பெருங்கடல்

(B) நங்கூரம்

(C) கப்பல்தளம்

(D) மாலுமி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

100) பிறமொழிச் சொற்களற்ற தொடரைத் தேர்க.

(A) பிராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு

(B) மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி?

(C) காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்

(D) கணினித் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

Leave a Comment