TNPSC Tamil Questions – 2023 Exams

TNPSC Tamil Questions:

TNPSC COMBINED ENGINEERING SUBORDINATE SERVICES IN EXAMINATION

DOE : 27/05/2023 FN & AN

1. பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக.

(A) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தார்கள்.

(B) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்கிறார்கள்.

(C) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்.

(D) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

2. எவ்வகை வாக்கியம் என கண்டெழுதுதல் (உ) இராவண காவியம் புலவர் குழந்தையால் எழுதப்பட்டது.

(A) பிறவினை

(B) செய்வினை

(C) தன்வினை

(D) செயப்பாட்டுவினை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

3. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல் (அ) தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.

(A) குமரன் கம்பராமாயணம் கற்பித்தார்

(B) குமரன் கம்பராமாயணம் கற்றார்.

(C) குமரன் கம்பராமாயணம் கற்கவில்லை.

(D) குமரன் கம்பராமாயணம் கற்றாரா?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

நடவாமை என்பது எதிர்மறைத் தொழிற்பெயருக்கான சான்று.

(A) நடவாமை என்றால் என்ன?

(B) தொழிற்பெயருக்குச் சான்று கூறுக.

(C) சான்று என்றால் என்ன?

(D) எதிர்மறைத் தொழிற்பெயர் சான்று தருக.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

5. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

அன்பு செலுத்துதலே மனிதநேயம் எல்லா உயிர்களிடத்தும்

(A) மனிதநேயம் அன்பு செலுத்துதலே உயிர்களிடத்தும் எல்லா

(B) எல்லா உயிர்களிடத்தும் மனிதநேயம் செலுத்துதலே அன்பு

(C) எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதலே மனிதநேயம்

(D) அன்பு எல்லா உயிர்களிடத்தும் மனிதநேயம் செலுத்துதலே.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

6. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிதல்

பொருத்தமான வினையை எடுத்து எழுது.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக ________.

அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் _________.

(A) வந்தான், வருகிறான்

(B) வந்துவிட்டான், வரவில்லை

(C) வந்தான், வருவான்

(D) வருவான், வரமாட்டான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

7. பொருத்தமான விடையைத் தேர்க :

(a) எதிர் மறுத்துக் கூறல்      1. உற்றது உரைத்தல் விடை

(b) உடன்பட்டுக் கூறல்       2. இனமொழி விடை

(c) நேர்ந்ததைக் கூறல்       3. நேர்விடை

(d) இனமானதைக் கூறல்     4. மறைவிடை

      (a)          (b)          (c)           (d)

(A)          4              1              2              3

(B)          4              3              1              2

(C)          4              2              3              1

(D)          4              3              2              1

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க

கணப்பறை, தவில், படகம், உறுமி, உடுக்கை

(A) படகம், தவில், கணப்பறை, உடுக்கை, உறுமி

(B) உறுமி,உடுக்கை, கணப்பறை, தவில், படகம்

(C) தவில், கணப்பறை, உடுக்கை, உறுமி, படகம்

(D) உடுக்கை, உறுமி, கணப்பறை, தவில், படகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

“உரைத்தான்”

(A) உரைத்தாள்

(B) உரைத்த

(C) உரைத்து

(D) உரை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

சென்றனர்

(A) செல்க

(B) சென்ற

(C) சென்று

(D) செல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   D

11. “ஏய்” என்பது என்னோடு _______, ________, _________ என்னும் பொருளை உடையது.

(A) பொருந்து,சேர், கூடு

(B) ஏவுதல், அழைத்தல், மறுத்தல்

(C) விளம்புதல், உரைத்தல், விளக்குதல்

 (D) கூறல், செப்புதல், மறுத்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

12. ‘கடற்கலன்கள்’ எவை எனக் கண்டறிக.

(A) கட்டுமரம், படகு, வலை

(B) நாவாய், வங்கம், தோணி

(C) கடல் உணவு, கடற்பாசி, கடல் உயிரி

(D) கழித்தோணி, காணப்பாய்ம்ரம், ஆஞ்சான் கயிறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

13. பிழையற்ற தொடரைக் கண்டறிக.

(A) மயில் ஓர் அழகான பறவை.

(B) மயிள் ஒரு அலகான பறவை.

(C) மயில் ஓர் அளகான பறவை.

(D) மயில் ஒரு அழகாண பறவை.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

14. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை பொருத்துக.

       (a) Patriotism                              1. இலக்கியம்

       (b) Literature                              2. நாட்டுப்பற்று

       (c) Art Gallery                             3. கலைக்கூடம்

       (d) Knowledge of Reality       4. மெய்யுணர்வு

                (a)          (b)         (c)          (d)

(A)          2              1              3              4

(B)          2             3              1              4

(C)          3             1              2              4

(D)          1             3              2              4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

15. ஒருமை பன்மை பிழை நீக்குக

மழையே பயிர்க்கூட்டமும், உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன

(A) புரிந்தன

(B) புரிகின்றது

(C) புரியுது

(D) புரிந்தது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

16. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.

சேவல் கொக்கரிக்கும், கோழி கூவும்

(A) கூவும், கொக்கரிக்கும்

(B) கரையும், கூவும்

(C) கொக்கரிக்கும், பேசும்

(D) கூவும், குழறும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

17. பிழை திருத்தம் – சந்திப்பிழையை நீக்குக.

தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்

(A) சிக்கனமாகப் பயன்படுத்துவேன்

 (B) சிக்கனம் ஆகப் பயன்ப்படுத்துவேன்

(C) சிக்கனம்மாக பயன்படுத்துவேன்

(D) சிக்கனம்மாக பயன்ப்படுத்துவேன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

18. பொருந்தாத இணையைக் கண்டறிக.

(A) குறிஞ்சி – யாமம்

(B) முல்லை – மாலை

(C) மருதம் – வைகறை

(D) பாலை – எற்பாடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

19.‘களர் நிலம்’ – எதிர்ச்சொல் தருக.

(A) வெறும் நிலம்

(B) திருந்தா நிலம்

(C) உவர் நிலம்

(D) திருந்திய நிலம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

20. இடம் + எங்கும் – சேர்த்தெழுதுக

(A) இடவெங்கும்

(B) இடமெங்கும்

(C) இடம்எங்கும்

(D) இடம்மெங்கும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

21. சேர்த்தெழுதுக.      காடு + ஆறு

A) காட்டாறு

(B) காடாறு

(C) காட்டு ஆறு

(D) காடு ஆறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

22. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.

(A) நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளது.

(B) நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்தது.

(C) நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்திருந்தது.

(D) நான்கு பக்கங்களிலும் மாட வீதிகள் அமைந்துள்ளன.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

23. ஒருமை பன்மை பிழை நீக்குக.

(A) இலட்சுமி கூப்பிடுகிறார்கள்

(B) இலட்சுமி கூப்பிடுகிறது

(C) இலட்சுமி கூப்பிடுவார்.

(D) இலட்சுமி கூப்பிடுவாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

24. தவறான இணையைக் கண்டறிக.

(A) மாடு – அஃறிணை ஒருமை

(B) அரசி – உயர்திணை ஒருமை

(C) மக்கள் – அஃறிணை பன்மை

(D) அரசன் – உயர்திணை ஒருமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

25. சரியான எண்ணடையைத் தெரிவு செய்க.

ஒன்று + ஐயம்

(A) ஒரு ஐயம்

(B) ஓர் ஐயம்

(C) ஐயம் ஒன்று

(D) ஒன்று ஐயம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

26. சரியான தொடரைத் தேர்ந்தெடு.

(A) அடைத்து வைக்க அன்பு தாழ்ப்பாள் இல்லை

(B) அன்பை அடைத்து வைக்க தாழ்ப்பாள் இல்லை

(C) அன்பை அடைத்து வைக்க இல்லை தாழ்ப்பாள்

(D) அடைத்து வைக்க தாழ்ப்பாள் அன்பு இல்லை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

27. இளவேனிற் காலத்திற்குரிய தமிழ் மாதங்களைத் தேர்ந்தெடுக்க.

(A) ஆவணி, புரட்டாசி

(B) ஐப்பசி, கார்த்திகை

(C) மார்கழி, தை

(D) சித்திரை, வைகாசி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

28. கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் செய்தித் தொடரைத் தெரிவு செய்க.

(A) கடமையைச் செய்

(B) நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்?

(C) முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.

(D) பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

29. கலைச்சொல் அறிக:

       Storm – தமிழ் சொல்?

(A) பொருட்காட்சி

(B) சூறாவளி

(C) சுழற்காற்று

(D) புயல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

30. ‘MISSILE’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்குரிய சரியான தமிழ்ச் சொல்லை அறிக.

(A) எறிகல்

(B) ஏவுகணை

(C) ஏவு ஊர்தி

(D) வானூர்தி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

31. கூற்று – சரியா? தவறா?

1.  தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அரச்சலூர் கல்வெட்டு சான்றளிக்கிறது.

2.   இக்கல்வெட்டில் தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டுள்ளன.

3.  மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தப்பட்டது.

(A)  கூற்று 1, 2, 3 சரி

(B)  கூற்று 1, 2 சரி 3 மட்டும் தவறு

(C)  கூற்று 1, 2 தவறு 3 மட்டும் சரி

(D)  கூற்று 1 சரி 2, 3 தவறு

(E)  விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

32. குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.

(A) உயிர் எழுத்துகள்

(B) முதல் மூன்று

(C) பத்து பார்வை

(D) எட்டு ஏணி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

33. இருபொருள் தருக.

வழி, நதி எனும் இருபொருள் தரும் சொல் எது ?

(A) பாதை

(B) ஆறு

(C) ஓடம்

(D) சாலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

34. ஒரு பொருள் தரும் பல சொற்கள் – உலகம்

(A) நானிலம், மாநிலம்

(B) புவனம், வானம்

(C) தரணி, பார்

(D) வையம், ஒடுவம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

35. பேசுதல் – இருபொருள் தருக.

(A) உரைத்தல், விளம்புதல்

(B) பார்த்தல், கேட்டல்

(C) ஆடுதல், பாடுதல்

(D) புவனம், வனம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

36. சரியான சொல் எது ?

நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

(A) மதிப்பு

(B) இயற்கை

(C) மிகுந்த

(D) சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

37. ‘யாது’ என்ற வினாச்சொல்லை பொருத்தமாக வாக்கியத்தில் அமைக்க.

(A) அறநெறிச்சாரம் என்பதன் பொருள் ______?

(B) திருக்குறளை இயற்றியவர் ________?

(C) கம்பர் இயற்றிய நூல்கள் _________?

(D)   ______ சொற்களைப் பேச வேண்டும்?

 (E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

38. சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக.

அண்ணா நூலகம் _________ உள்ளது?

(A) ஏன்

(B) எங்கு

(C) எது

(D) எவற்றை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

39. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

வ.உ.சி. “சுதேசி நாவாய்ச் சங்கம்”என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்.

(A) சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?

(B) சுதேசி நாவாய்ச் சங்கம் என்றால் என்ன?

(C) கப்பல் நிறுவனம் எங்குள்ளது?

(D) சுதேசி என்றால் என்ன?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

40. நான் வந்தேன். – எனும் வாக்கியத்தினை எதிர்காலத்தில் குறிப்பிடுக.

(A) நான் வந்தார்

(B) நான் வருவேன்

(C) நான் வருகிறேன்

(D) நான் வரவில்லை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

41. பதனம் – என்பதன் வட்டார வழக்குச் சொல் எது?

(A) கவனமாக

(B) பாத்தி

(C) சலிப்பு

(D) தொலைவில்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

42. கீழ்க்கண்டவற்றில் சரியான நிறுத்தக் குறிகள் இடம் பெற்ற தொடர் எது?

(A) சேக்கிழார், எழுதிய நூல் எது !

(B) அந்தோ ! இயற்கை அழிகிறதே!

(C) நல்லவன் வாழ்வான், தீயவன் தாழ்வான்;

(D) பூக்கள் நிறைந்த இடம், சோலை ஆகும்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

43. கீழ்க்கண்ட வாக்கியத்தில் சரியான நிறுத்தற்குறியிட்டது எது?

(A) அடேயப்பா! எவ்வளவு பெரிய ஏரி?

(B) “அடேயப்பா எவ்வளவு பெரிய ஏரி!

(C) ‘அடேயப்பா! எவ்வளவு பெரிய ஏரி!’

(D) அடேயப்பா, எவ்வளவு பெரிய ஏரி?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

44. அச்சம், அவலம், இரங்கல் முதலான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது

(A) ஒற்றை மேற்கோள் குறி

(B) இரட்டை மேற்கோள் குறி

(C) வினாக்குறி

(D) வியப்புக்குறி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

45. சோணாடு – என்பதன் மரூஉ

(A) குடந்தை

(B) எந்தை

(C) சோழநாடு

(D) கோவை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

46. இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.

‘கிளாசிக்கல் லிட்டரேச்சர்’

(A)  செவ்விலக்கியம்

(B) நவீன இலக்கியம்

(C) நாட்டுப்புற இலக்கியம்

(D) வட்டார இலக்கியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   A

47. ‘என்னுடன் ஊருக்கு வருவாயா?’ என்ற வினாவிற்கு ‘வராமல் இருப்பேனா’ என்று கூறுவது.

(A) நேர் விடை

(B) மறை விடை

(C) உறுவது கூறல் விடை

(D) வினா எதிர்வினாதல் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   D

48. ‘DEBIT CARD’ – இணையான தமிழ்ச் சொல் தேர்க.

(A) கடன் அட்டை

(B) பற்று அட்டை

(C) பணத்தாள்

(D) வரைவோலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

49.‘டெலிகேட்’ – தனித்தமிழ் தருக.

(A) இணைப்பாளர்

(B) பேராளர்

(C) தொடர்பாளர்

(D) செய்தியாளர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

50. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.

(A)  File – கோப்புகள்

(B) Xerox – ஜெராக்ஸ்

(C) Paper – தாள்

(D) Pencil – எழுதுகோல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   A

51. ‘தாமரை இலை நீர் போல’ – உவமை கூறும் பொருள் யாதென கண்டறிக.

(A) சேர்ந்திருத்தல்

(B) பட்டும் படாமல் இருத்தல்

(C) ஒட்டியிருத்தல்

(D) பிரிந்திருத்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

52. பேரறிவாளன் திருபோல எனும் உவமை கூறும் பொருள் எதுவென கண்டறிக.

(A) பலருக்கு பயன்படும்

(B) சிலருக்கு பயன்படும்

(C) தனக்கு பயன்படும்

(D) யாருக்கும் பயன்படாது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   A

53. சரியான இணையைக் கண்டறிக :

(A) இலவு காத்த கிளிபோல              –     ஏமாற்றம்

(B) இடியோசை கேட்ட நாகம்போல       –     விரைவு

(C) குன்றின் மேலிட்ட விளக்கு போல     –     வேதனை

(D) அடுத்தது காட்டும் பளிங்கு போல     –     சேர்ந்திருத்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   A

54. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக.

வீரர்கள் நாட்டைக் காத்தனர்

(A) தன்வினை

(B) பிறவினை

(C) செய்வினை

(D) செயப்பாட்டுவினை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   C

55. விடைக்கேற்ற சரியான வினாவைத் தேர்ந்தெடு.

வ.உ.சி அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.

(A) தமிழையும் ஆங்கிலத்தையும் கற்றவர் யார்?

(B) வ.உ.சி.எதைக் கற்றார்?

(C) வ.உ.சி. அவர்கள் எந்த மொழியில் புலமை பெற்றிருந்தார்?

(D) வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   D

56. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

வ.உ.சி. வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மைகள் பெற்றிருந்தார்.

(A) வ.உ.சியின் பெருமைகளைக் கூறு?

(B) வ.உ.சியின் முகத்தன்மை எது ?

(C) வ.உ.சியின் பன்முகத்தன்மைகள் யாவை?

(D) வ.உ.சியின் தன்மைகள் பன்முகமா?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   C

57. இருவினைகளின் பொருள் வேறுபாடு அறிந்து சரியான தொடரைத் தேர்ந்தெடு

குவிந்து, குவித்து

(A) சந்தையில் குவிந்த குப்பையை அகற்றிட பணியாளர்கள் குவிந்தார்கள்.

(B) சந்தையில் குவிந்த குப்பையை அள்ளி வண்டியில் குவித்து வைத்தனர்.

(C) சந்தையில் குப்பையை அள்ளி குவித்து வண்டி குவிந்தது.

(D) சந்தையில் குவிந்து வைத்த குப்பையை வண்டி குவித்தது.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

58. சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.

(A) வாணிதாசன் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் கவிஞர் என்று புகழப்படுபவர்.

(B) தமிழகத்தின் கவிஞர் வாணிதாசன் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்.

(C) கவிஞர் வாணிதாசன் என்று புகழப்படுபவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்

(D) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   D

59. அகர வரிசைப்படுத்திய சரியான விடையைத் தேர்வு செய்க.

I. அன்னை, அறிவு, அன்று, அன்பு, அழகு

II. அழகு, அறிவு, அன்பு, அன்று, அன்னை

III. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்

IV. காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம்

(A) II மற்றும் IV

(B) I மற்றும் II

(C)  III மற்றும் IV

(D) III மற்றும் II

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   A

60. ‘எழுதிய பாடல்’- எவ்வகைத் தொடர்?

(A) வினையெச்சத் தொடர்

(B) பெயரெச்சத் தொடர்

(C) வினைமுற்றுத் தொடர்

(D) எழுவாய்த் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

61. ‘மகிழ்’ என்ற சொல்லின் வினையாலணையும் பெயரைத் தெரிவு செய்க.

(A) மகிழ்ந்தார்

(B) மகிழ்ந்தோர்

(C) மகிழ்ச்சி

(D) மகிழ்ந்த

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

62. ‘எழுது’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக.

(A) எழுதிய

(B) எழுதி

(C) எழுதினான்

(D) எழுதுக

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

63. வேர்ச்சொல்லைக் கண்டறிக. ‘கற்றார்’

(A) கற்

(B) கல்

(C) கற்று

(D) கற்ற

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

64. பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைக் கண்டறிக.

   மாலா ________ விழுந்தாள்.

(A) பல்லத்தில்

(B) பள்ளத்தில்

(C) பற்றத்தில்

(D) பாரத்தில்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

65. சரியான தொடரை கண்டறிக.

(A) அரம் செய விரும்பு

(B) அறம் செய விரும்பு

(C) அறம் செய விறும்பு

(D) அரம் செய விறும்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

66. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக.

(A) Trust – கருணை

(B) Patriotism – அறக்கட்டளை

(C) Humanity – மனிதநேயம்

(D) Mercy – நாட்டுப்பற்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   C

67. சரியான எதிர்மறைச் சொல்லைக் கொண்டு நிரப்புக :

மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள்

(A) அல்ல

(B) அல்லள்

(C) அன்று

(D) அல்லை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

68. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக.

(A) கொடியிலுள்ள மலரை எடுத்து வா

(B) கொடியிலுள்ள மலரைக் கொண்டு வா

(C) கொடியிலுள்ள மலரைப் பறித்து வா

(D) கொடியிலுள்ள மலரைக் கொய்து வா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   D

69. மரபு வழுவற்ற தொடர் எது ?

(A) குயவன், சக்கரத்தைப் பயன்படுத்தி மண்பானை செய்தான்

(B) குயவன், சக்கரத்தைப் பயன்படுத்தி மண்பானை வனைந்தான்

(C) குயவன் சக்கரத்தைப் பயன்படுத்தி மண்பானை உருவாக்கினான்

(D) குயவன் சக்கரத்தைப் பயன்படுத்தி மண்பானை தயாரித்தான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

70. வழூஉச் சொல்லற்றத் தொடர் எது ?

(A) கண்ணா, நேற்று நீ வந்தேன்

(B) கண்ணா, நேற்று நீ வருகிறாய்

(C) கண்ணா, நேற்று நீ வருகிறாய்

(D) கண்ணா, நேற்று நீ வந்தாய்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

71. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

(A) மண்ணீட்டாளர்

(B) கண்ணுள் வினைஞர்

(C) துகிர்

(D) காருகர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

72. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(A) நற்றிணை

(B) குறுந்தொகை

(C) மதுரைக்காஞ்சி

(D) கலித்தொகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி (73-77) :

இன்றைக்குப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு இல்லை எனில், உலகை எல்லாம் வலையாகப் பிடித்திருக்கிற, ஊடகத்தின் வளர்ச்சி இல்லை. தொலைக்காட்சி, வானொலி திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன. விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழிபேசும் மக்களையும் அடைகின்றன. இது மொழிபெயர்ப்புக் காலம். காலையில் எழுந்தவுடன் நாளிதழ்ப்படிப்பு, மொழிபெயர்ப்பு மூலமே நமக்குச் சாத்தியமாகிறது.

73. இன்றைய காலகட்டத்தில், பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு எது தேவைப்படுகிறது?

(A) விளம்பரம்

(B) செய்தி

(C) மொழிபெயர்ப்பு

(D) மொழி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

74. மொழிபெயர்ப்பு இல்லை எனில், எதன் வளர்ச்சி இல்லாமல் போயிருக்கும்?

(A) தொலைக்காட்சி

(B) வானொலி

(C) திரைப்படம்

(D) ஊடகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

75. மொழிபெயர்ப்பால் வளர்ச்சி பெறுவன யாவை?

(A) இலக்கணம்

(B) இலக்கியம்

(C) புனைகதை

(D) இதழ்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

76. விளம்பர மொழிக்கு எது தேவைப்படுகிறது?

(A) திரைப்படங்கள்

(B) தொலைக்காட்சி

(C) நாடகங்கள்

(D) மொழிபெயர்ப்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

77. மொழிபெயர்ப்பு மூலம் நமக்குச் சாத்தியமாவது எது?

(A) நாளிதழ்ப் படிப்பு

(B) செய்தி வாசித்தல்

(C) சுற்றுலா செல்லுதல்

(D) வெளிநாடுகளுக்குச் செல்லுதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

78. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

(a) பகடு    –     1.  கரும்பு

(b) வேரி    –     2.  எருமைக்கடா

(c) மேதி    –     3. எருமை

(d) கழை    –     4. தேன்

      (a)    (b)    (c)    (d)

(A)          3              1              2              4

(B)          2              3              4              1

(C)          2              4              3              1

(D)          3              4              1              2

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

79. சொல்லுக்கேற்ற பொருள் இடம்பெற்றுள்ள தொடரைக் கண்டறிக.

(A) கோடு  – மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன.

(B) நேமி  –  மேகம் மலையுச்சியைச் சூழ்ந்திருந்தது.

(C) விரிச்சி  –  அவன் கோபத்தில் தீய சொற்களைப் பேசினான்.

(D) செலவு   –  மாலை வேளையில் மாடுகள் வீட்டை நோக்கி வந்தன.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

80. சொல்லும் பொருளும் பொருந்தியுள்ளது எது?

(A) வருக்கை – இருக்கை

(B) புள் – தாவரம்

(C) அள்ளல் – சேறு

(D) மடிவு – தொடக்கம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

81. சரியான எண்ணடையைத் தெரிவு செய்க.

ஒன்று + நாள்

(A) ஒரு நாள்

(B) ஓர் நாள்

(C) ஒற்றை நாள்

(D) ஒன்று நாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

82. சரியான எண்ணடையைத் தெரிவு செய்க.

புல் – கூட்டுப்பெயர்.

(A) புற்கூட்டு

(B) புற்கட்டு

(C) புற்குவியல்

(D) புற்குலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

83.‘படலை’ என்பது

(A) துளை

(B) கிளை

(C) மலை

(D) மாலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

84. ‘செறிவு’ என்பது

(A) சான்றோர் காட்டிய வழியில் நடத்தல்

(B) அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்.

(C) முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்.

(D) மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

85. கலைச்சொல் அறிக :

Renaissance

(A) மறுமலர்ச்சி

(B) நம்பிக்கை

(C) மெய்யியலாளர்

(D) மீட்டுருவாக்கம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

86. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று [A] :    இந்திய தேசிய இராணுவப் படைத் தலைவராக இருந்த தில்லான் “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார்.

காரணம் [R] : தமிழகத்திலிருந்து பெரும்படையைத் திரட்டி இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர் பசும்பொன் முத்துராமலிங்கனார்.

(A) கூற்று தவறு, காரணம் சரி

(B) கூற்று சரி, காரணம் தவறு

(C) கூற்று சரி, காரணம் சரி

(D) கூற்று தவறு, காரணம் தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   C

87. கூற்று. காரணம் – சரியா? தவறா?

கூற்று [A] : ‘உண்’ ‘பெறு’ முதலான துணை வினைகள் செயப்பாட்டு வினைகளாக அமைகின்றன.

காரணம் [R] : செயப்படுபொருளை முதன்மைப்படுத்தும் வினை செயப்பாட்டு வினை.

(A) கூற்று சரி, காரணம் சரி

(B) கூற்று தவறு, காரணம் சரி

(C) கூற்று தவறு, காரணம் தவறு,

(D) கூற்று சரி,காரணம் தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

88. குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.

(A) அறம், பொருள்

(B) உணவு, ஊதல்

(C) எறும்பு, ஏணி

(D) இன்பம், ஈகை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

89. அடைப்புக்குள் உள்ள சொல்லை தக்க இடத்தில் சேர்க்க.

நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள்.

(A) (ஒரு)

(B) (மிகுந்த)

(C) (என்ன)

(D) (இயற்கை)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  A

90. சரியான இணைப்புச் சொல் எழுதுக.

நூலின் பயன் படித்தல். ________ கல்வியின் பயன் கற்றல்.

(A) அதனால்

(B) எனில்

(C) ஆகையால்

(D) ஏனவே

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

91. சரியான இணைப்புச் சொல் எழுதுக.

தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. _______  இரண்டு நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

(A) ஏனெனில்

(B) அதனால்

(C) எனவே

(D) மேலும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

92. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

நாம் வாழ்வில் ஒழுக்க நெறியைப் பின்பற்ற வேண்டும். _______  துன்பப்பட நேரிடும்.

(A) ஆகையால்

(B) அதனால்

(C) இல்லையென்றால்

(D) எனவே

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

93. குடியரசுத்தலைவர் நாளை தமிழகம் வருகிறார். – இத்தொடரில் வழுவமைதிச் சொல் எது?

(A) நாளை

(B) வருகிறார்.

(C) தமிழகம்

(D) குடியரசுத்தலைவர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

94. ‘விண்’ எனும் சொல்லுடன் பொருந்தி வரும் சொல் எதுவெனக் கண்டறிக:

(A) தடை

(B) வெளி

(C) மின்

(D) பழி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  B

95. ‘கிளி’ என்பதுடன் பொருந்தி வரும் ஒலி மரபுச் சொல் எதுவெனக் கண்டறிக.

(A) கூவும்

(B) அகவும்

(C) குழறும்

(D) பேசும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  D

96. சரியான எழுத்து வழக்கைக் கண்டறிக.

ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல்.

(A) ரவைக்கு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல்

(B) ராத்திரிக்கு சிறிய தந்தையைக் காவலுக்குப் போகுமாறு சொல்

(C) இரவுக்கு சிறிய தந்தையைக் காவலுக்குப் போகுமாறு சொல்

(D) ராவுக்கு சின்ன அப்பாவை காவலுக்கு போகுமாறு சொல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

97. குடந்தை – என்பதன் மரூஉ எது ?

(A) புதுக்கோட்டை

(B) சைதாப்பேட்டை

(C) கும்பகோணம்

(D) புதுச்சேரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :  C

98. ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக.

சரியான ஊர்ப்பெயரின் மரூஉவைக் கண்டுபிடிக்க.

(A) திருச்சி –   திருச்சிராப்பள்ளி

(B) கும்பை  –   கும்பகோணம்

(C) தம்பை     –   தஞ்சாவூர்

(D) உதகை    –   கொடைக்கானல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   A

99. ‘பட்’ – இணையான தமிழ்ச்சொல் தருக.

(A) ஆதலால்

(B) ஆனால்

(C) ஏனெனில்

(D) அதனால்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

100. பிறமொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக.

(A) கம்ப்யூட்டர் துறையில் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்

(B) கடல் நீர் உப்பாக இருக்கிறது

(C) கந்தன் தியேட்டரில் சினிமா பார்த்தான்

(D) வேலைகளை எளிதாக்க மிஷின்கள் உதவுகின்றன

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY :   B

Leave a Comment