TNPSC GROUP 4 MATHS ONLINE TEST (2022 PYQ) – 03

TNPSC GROUP 4 MATHS ONLINE TEST (2022 PYQ) – 03:

ALL QUESTIONS ARE TAKEN FROM 2022 TNPSC EXAMS ORIGINAL QUESTION PAPER.

CLICK START BUTTON TO ATTEND TNPSC GROUP 4 MATHS ONLINE TEST – 03:

18

TNPSC MATHS ONLINE TEST

TNPSC MATHS ONLINE TEST – 03

ALL QUESTIONS ARE TAKEN FROM TNPSC PREVIOUS YEAR EXAMS.

1 / 25

1) Find the missing number in the series 1, 9, 25, 49, 81, …….

1, 9, 25, 49, 81, ….. என்ற தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க.

2 / 25

2) Next term of sequence 1, 1, 2, 3, 5, 8, 13 is

1, 1, 2, 3, 5, 8, 13, …… என்ற தொடரியின் அடுத்த உறுப்பு

3 / 25

3) If the sum of a number and its square is 1122. What is the number?

ஓர் எண் மற்றும் அதன் வர்க்கத்தின் கூடுதல் 1122 எனில் அந்த எண் யாது?

4 / 25

4) What will be the probability that a non-leap year will have 53 Saturdays?

சாதாரண ஆண்டில் 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு என்ன?

5 / 25

5) The next term of the sequence 3/16, 1/8, 1/12, 1/18, …… is

3/16, 1/8, 1/12, 1/18, ……. என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு

6 / 25

6) If a = 1, b = 2, …, z = 26 then OWL =

a = 1, b = 2, …, z = 26 எனக் கொள்வோமானால் OWL  என்ற வார்த்தையின் மதிப்பு எதற்கு சமமாக இருக்கும்?

7 / 25

7) A and B together can complete a piece of work in 6 days. If A alone can complete the same work in 18 days, in how many days can B alone complete that work?

A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கிறார்கள். அதே வேலையை A மட்டும் தனியாக 18 நாளில் முடிப்பர் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாளில் முடிப்பர்.

8 / 25

8) A sector containing an angle of 150° is cut off from a circle of radius 28cm and folded into a cone. Find the curved surface area of the cone. (π  =  22/7)

28 செ.மீ. ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 150° மையக்கோணம் கொண்ட ஒரு வட்ட கோணப்பகுதி வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால் அதன் வளைபரப்பைக் காண்க. (π  =  22/7)

9 / 25

9) If a wheel of a car can cover a distance of 3520 cm in 20 rotations, then find the radius of the wheel

ஒரு மகிழுந்தின் சக்கரம் 20 சுற்றுகளில் 3520 செ.மீ. தொலைவைக் கடக்கிறது எனில் அதன் ஆரம் காண்க.

10 / 25

10) If the area of a square with side ‘a’ units is equal to the area of a triangle with base ‘a’ units then the altitude is

‘a’ அலகுகள் பக்கமுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவானது ‘a’ அலகுகள் அடிப்பக்கமுள்ள ஒரு முக்கோணத்தின் பரப்பளவிற்குச் சமம் எனில் அம்முக்கோணத்தின் குத்துயரம்.

11 / 25

11) The ratio of the volumes of a cylinder, a sphere and a cone if each has same diameter and same height is

சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளை, ஓர் கோளம், ஒரு கூம்பு இவற்றின் கனஅளவுகளின் விகிதம்

12 / 25

12) What is the shape of the figure? If we rotate a hemisphere about its diameter in one full rotation.

ஓர் அரைவட்டத்தை அதன் விட்டத்தை அச்சாகக் கொண்டு ஒரு முழுச்சுற்று சுழற்றும் போது உண்டாகும் திண்ம உருவம்

13 / 25

13) If a sum amounts to Rs. 1,352 in 2 yr at 4% compound interest then find the principal.

4% கூட்டு வட்டிக்கு 2 வருடத்தில் கிடைக்கும் மொத்த தொகை ரூ.1,352 எனில் அசலைக் காண்க.

14 / 25

14) The value of a motor cycle 2 years ago was Rs. 80,000. It depreciates at the rate of 4% p.a. Find its present value.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோட்டார் வாகனத்தின் விலை ரூ. 80,000 இது ஒவ்வொரு வருடமும் 4% குறைகிறது எனில் அதன் தற்போதைய விலை யாது?

15 / 25

15) 6 persons complete a work in 12 days After 2 days, 6 more persons join the work. How long will it take to complete the work?

6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர். 2 நாள்கள் கழித்து மேலும் 6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில் அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்வார்கள்?

16 / 25

16) If a : b = b : c then a4 : b4 =

a : b = b : c எனில் a4 : b4 =

17 / 25

17) Weight of 15 charts is 50 grams. How many charts will be there in 2 ¼ kg weight of same chart?

15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 ¼ கிகி. எடையில் எத்தனை அட்டைகள் இருக்கும்?

18 / 25

18) 6 bells commence tolling together and toll of the intervals are 2, 4, 6, 8, 10 and 12 sec respectively. In 1 h, how many times do they toll together?

6 மணிகள் ஒன்றாக மணி ஒலிக்க தொடங்குகின்றன மற்றும் மணி ஒலிக்கும் இடைவெளிகள் முறையே 2, 4, 6, 8, 10 மற்றும் 12 நொடி. 1 மணி நேரத்தில் மணிகள் எத்தனை முறை ஒன்றாக ஒலிக்கும்?

19 / 25

19) The G.C.D. of x4 – y4 and x2 – y2 is

(x4 – y4) மற்றும் x2 – y2 இன் மீ.பொ.வ.

20 / 25

20) If x + 1/x = 2 then what is the value of x – 1/x ?
x + 1/x = 2 எனில் x – 1/x – ன் மதிப்பு என்ன?

21 / 25

21) The monthly income of a person is Rs. 5,000. If his income is increased by 30% then what is his new monthly income?

ஒரு நபரின் மாத வருமானம் ரூ. 5,000. அவரது வருமானம் 30% அதிகரித்தால், அவரது புதிய மாத வருமானம் என்ன?

22 / 25

22) Find x ?      2 1/3 + 1 5/6 – x + 20/3 = 7 1/3
x ன் மதிப்பைக் காண்க.
2 1/3 + 1 5/6 – x + 20/3 = 7 1/3

23 / 25

23) Find the value of 45% of 750 – 25% of 480

மதிப்பு காண்க: 750 ன் 45% — 480 ன் 25%

24 / 25

24) A box contains 75 balls of red or blue colour. If there are 18 red balls find the percentage of blue balls in the box.

ஒரு பெட்டியில் சிவப்பு மற்றும் நீல நிறப் பந்துகள் மொத்தமாக 75 இருக்கின்றன. அவற்றுள் 18 சிவப்பு பந்துகள் இருக்குமெனில் நீல நிறப் பந்துகளின் எண்ணிக்கையை சதவீதத்தில் காண்க.

25 / 25

25) The depreciation of a television is 10% every year. It was purchased 3 years ago. If its present value is Rs. 83,835, its purchase price was

ஒரு தொலைக்காட்சி வாங்கிய விலையிலிருந்து ஒவ்வொரு வருடமும் 10% குறைகிறது. அத்தொலைக்காட்சியின் தற்போதைய மதிப்பு ரூ. 83,835 எனில், 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலை யாது?

JOIN TNPSC GROUP 4 MATHS WHATSAPP CHANNEL:

CLICK HERE

JOIN TNPSC GROUP 4 MATHS TELEGRAM GROUP:

CLICK HERE

Leave a Comment