Proverbs in Tamil and English

Proverbs in Tamil and English:

தமிழ்ப் பழமொழிகளும் அதற்கு இணையான ஆங்கிலப் பழமொழிகளும்:

Tamil and Parallel English Proverbs:

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
Face is the index of the mind

அகம்பாவம் அழிவைத் தரும்
Pride goes before a fall

அச்சத்திற்கு மருந்து இல்லை
There is no medicine for fear

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்
Face the danger boldly than live in fear

அஞ்ஞானி செல்வத்தையும், ஞானி நற்குணத்தையும் விரும்புகிறான்.
The fool seeks wealth and the wise perfection

அடாது செய்பவர் படாது படுவர்
Wrong do will be severely punished (wicked people suffer a lot)

அடாது மழை பெய்தாலும் விடாது நாடகம் நடக்கும்
Play will continue even if it rains incessantly. (work will go on at any cost)

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்
None will check better than a beat.

அடி என்பதற்குப் பெண்டாட்டி இல்லை, அஷ்ட புத்திராள் எத்தனை பேர்!
Even there is no wife and how is it possible to know about the children.

அடிக்கடி விருந்தாளி அழையா விருந்தாளி
A guest who visits often is uncalled for

அடிக்கிற கைதான் அணைக்கும்
The hand that beats alone will embrace

அடித்துக் குழந்தையை வளர்
Bring out the child strictly

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
Beat after beat will make even a stone move. (Try try again you will succeed at last)

அடுப்பில் பூனைக்குட்டி தூங்குகிறது.
Oven is not in use (Kitten sleeps in the oven)

அணையப் போகும் தீபம்
A lustre before death ( the light is going to stop burning)

அதிக உமி சிறிதளவு உணவு
Much bran little meal

அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல
It is not wise to talk more. (Talking more is not wisdom)

அதிகம் கேள், குறைவாகப் பேசு
Hear more, but talk less

அதிகம் நம்புபவன், அதிகம் கடமைப்பட்டவன்
He that trusts much obliges much

அதிகம் வளைத்தால் வில் உடையும்
The bow will break if it is bent more

அதிருஷ்ட தேவதை சிரிக்கும் போது தழுவிக் கொள்,
அதிருஷ்டம் கதவைத் தட்டும் போது அணைத்துக் கொள்.
When fortune smiles embrace her

சுங்கச் சாவடியில் பன்றி வாங்கு.
Buy a swine in a pike

சுடுகாட்டில் அனைவரும் சமம்.
All are equal in a cremation ground.

சுடுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்.
A crow will like the dead body in a burial ground.

சுதந்தரமாய் பிறந்த மனிதன் எங்கும் சங்கிலியால் பூட்டப்பட்டிருக்கிறான். (இன்றும் அடிமையாய் உள்ளான்).
Man is born free but he is in chains every where.

சுதந்தரமோ, சொர்க்கமோ?
Is it freedom or heaven?

சுதந்தரம் எனது பிறப்புரிமை.
Freedom is my birth right.

சுதந்தரம் என்பது பொறுப்புணர்ச்சி, எனவே பலர் அதற்கு அஞ்சுவர்.
Liberty means responsiblity, so many fear for it.

சுமப்பவனுக்குத் தெரியும் பாரம்.
The bearer knows the burden. The wearer knows where the shoe pinches.

சுருங்கச் சொல்லி விளங்க வை.
Brevity is the soul of it.

சுவர்களுக்கும் செவிகள் உண்டு, காது கேட்கும்.
Even walls have ears, and they will hear.

சுழலும் உலகம் அனைத்தையும் சுழற்றுகிறது.
The spinning world makes every thing rotate.

சுறுசுறுப்பு வெற்றி தரும்.
Industry is the mother of success. Busy people will succeed. Briskness will bring success.

சூடுபட்ட குழந்தை நெருப்புக்கு அஞ்சும்.
A burnt child dreads the fire.

சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.
A man is affected by his environment.

செட்டி சிங்காரிப்பதற்குள் பட்டணம் கொள்ளைபோகும்.
Before a trader finishes his make up the whole town will be robbed.

செத்த பாம்பை அடிக்கும் வீரன்.
A brave man who killed a dead snake.

செயல்கள் கனிகள், சொற்கள் இலைகள்.
Deeds are fruits, while words are leaves.

செயல்கள் தேவை; சொற்களல்ல.
Wanted deeds only, not words.

செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்.
Whatever is worth doing, is worth doing well.

செய்யுள் அழகு மனதைக் கொள்ளை கொள்ளுதல்.
The charm of the poetry captivates the soul.

செய்வதை திருந்தச் செய்.
Whatever you do, do it properly.

செல்லாக் காசு எப்போதும் திரும்பி வரும்.
Bad money always comes back.

செல்வத்துக்கு இறக்கை உண்டு.
Riches have wings.

செல்வ இழப்பு இழப்பல்ல; உடல் நல இழப்பு ஓரளவு இழப்பாகும்; ஆனால் நற்பெயர் இழப்பு அனைத்தையும். இழந்ததாகும்.
When wealth is lost nothing is lost. When health is lost something is lost. When character is lost everything is lost.

அடங்கத் தெரியாதவனுக்கு ஆளத் தெரியாது.
No man can be a good ruler unless he has first been ruled

அதிகாரம் ஆளை அடையாளம் காட்டும்.
Authority shows the man

அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்.
Good luck reaches further than long arms

thatstamil

4 thoughts on “Proverbs in Tamil and English”

Leave a Comment