தமிழக அரசின் 2023 பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் என்னென்ன?

பொங்கல் பரிசு தொகுப்பு 2023:

தமிழக அரசின் 2023 பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் என்னென்ன?

பொங்கல் பரிசு 2023:

கடந்தாண்டு பொங்கல் சமயத்தில் பரிசுத்தொகை எதுவும் இல்லாமல் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ,பாசி பருப்பு என மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொடர்பாக கடந்த டிசம்பர் 19ஆம் தேதி ஆலோசனை நடைபெற்ற நிலையில், இது குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூபாய் ஆயிரம் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் ரொக்கம் தராதது மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த முறை ரேஷன் கார்டு ஒன்றுக்கு பொங்கல் பரிசு தொகுப்போடு ஆயிரம் ரூபாய் ரொக்கம் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தைத்திருநாளான பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் பின்வருமாறு:

பொங்கல் பரிசு 2023
பொங்கல் பரிசு 2023

✍ தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரூபாய் 1000

✍ குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை

எப்போது பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்கும்?

ரேஷன் அட்டைதாரர்கள் வரும் ஜனவரி 2, 2023 தேதி முதல் பொங்கல் பரிசு பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன.

PHH

PHH-AAY

NPHH

NPHH-S

NPHH-NC

யாருக்கெல்லாம் கிடைக்கும் இந்த பொங்கல் பரிசு?

சர்க்கரை அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காது.

பொங்கல் பரிசு இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்:

PHH

NPHH

AAY

Leave a Comment