General Tamil questions with answers

General Tamil Questions with Answers:

 கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சு மொழியாகும். இவ்வாறு பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல்நிலை. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சு மொழியே என்பர். பேச்சு மொழி உணா்வுகளை எளிதாக வெளிப்படுத்தும். அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. பேசப்படும் சொற்கள் மட்டுமன்றிப் பேசுபவரின் உடல்மொழி. ஒலிப்பதில் எற்ற இறக்கம் ஆகியனவும் பேச்சு மொழியின் சிறப்புக் கூறுகள் ஆகும்.

1) மொழியின் முதல் நிலை

A) பேசுவது

B) கேட்பது

C) பேசுவது எழுதுவது

D)  பேசுவதும் கேட்பதும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

2) மொழியின் உயிர் நாடி எது?

A) பேச்சு மொழி

B) எழுத்து மொழி

C) சைகை மொழி

D)  உடல் மொழி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

3) பேச்சு மொழி எதை எளிதாக வெளிப்படுத்தும்?

A) செயல்களை

B) உணர்வுகளை

C) உரிமைகளை

D)  செய்திகளை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

4) பேச்சு மொழியின் நோக்கம்

A) கேட்பது

B) எழுதுவது

C) செயல் வெளிப்பாடு

D)  கருத்து வெளிப்பாடு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

5) பேச்சு மொழியின் சிறப்புகள் கூறுகளுள் ஒன்று

A) சைகை மொழி

B) ஒலிக்குறியீடு

C) உடல் மொழி

D)  வரிவடிவம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

6) ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக

A) காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளது

B) காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன

C) காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உளது

D)  காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளனர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

7) ஒருமையைக் குறிக்கும் தொடா்

A) நான் வந்தோம்

B) நாம் வந்தேன்

C) நான் வந்தேன்

D)  நாம் வருகிறோம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

8) அஃறிணை பலவின்பாடு விகுதிகள் யாவை?

A) அா், ஆா், மார்

B) அ, வை, கள்

C) அன், ஆன், மான்

D)  அள், ஆள், ள்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

9) பொருந்தாத இணை எது?

A) நிறை – மேன்மை

B) பொறை -பொறுமை

C) மதம் – கொள்கை

D)  மையல் – நட்பு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

10) “கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?“ – இப்பழமொழி உணர்த்தும் பொருளைத் தோ்க

A) தவறிழைத்தவன் மன்னிக்கப்படுவான்

B) பாவச் செயலுக்கு பரிகாரம் இல்லை

C) குற்றத்துக்குத் தண்டனை தேவவையற்றது

D)  நீரில் மூழ்கினால் பாவம் கரையும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

11) பொருத்தும் வரிசையைத் தேர்ந்தெடுக்க

a) கொண்டல்  1) மேற்கு

b) கோடை             2) தெற்கு

c) வாடை          3) கிழக்கு

d) தென்றல்               4) வடக்கு

          a        b       c        d

A)      1        2        3        4

B)      3        1        4        2

C)      4        3        2        1

D)      3        4        1        2

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

12) சரியான எண்ணடையைத் தெரிவு செய்க

ஒன்று + தலைவன்

A) ஓா் தலைவன்

B) ஒரே தலைவன்

C) ஒற்றை தலைவன்

D)  ஒரு தலைவன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

13) பிழை திருத்துக

சரியான எண்ணடையைக் கண்டறிக

A) ஓா் குளம்

B) ஒன்று குளம்

C) ஒரு குளம்

D)  ஒன் குளம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

14) சரியான தொடரைத் தோ்ந்தெடுத்தல்

“காலக்கணிதம்” கவிதையில் இடம் பெற்ற சரியான தொடரைக் கண்டறிக

A) இக்ழ்ந்தால் என்மனம் இறந்து விடாது

B) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது

C) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்

D)  என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

15) வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்

உன் திருக்குறள் நுாலைத் தா – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

A) உணர்ச்சி வாக்கியம்

B) செய்தி வாக்கியம்

C) கட்டளை வாக்கியம்

D)  செய்வினை வாக்கியம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

16) சரியான தொடரைக் கண்டறிக

A) அழைத்து வாருங்கள் எனக்காகக் காத்திருக்கிறவரை கலையரங்கத்தில்

B) எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள் கலையரங்கத்தில்

C) கரையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்

D)  எனக்காகக் காத்திருக்கிறவரை கலையரங்கத்தில் அழைத்து வாருங்கள்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

17) சொற்களின் கூட்டுப் பொயர்கள்

வாழை

சரியான எண்ணடையைத் தோ்வு செய்க

A) வாழைத் தோப்பு

B) வாழைக்குவியல்

C) வாழைக் தோட்டம்

D)  வாழைதத் திரள்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

18) குளித்தல் என்பது

A) உடம்பினைத் துாய்மை செய்தல்

B) உடலைக்குளிர வைத்தல்

C) உடலைப் பக்குவப் படுத்துதல்

D)  உடலைப் பெருமைப் படுத்துதல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

19) சரியான பொருளை அறிக

வாய்மை எனப்படுவது _____________________

A) அன்பாகப் பேசுதல்

B) தமிழில் பேசுதல்

C) தீமைதராத சொற்களைப் பேசுதல்

D)  சத்தமாகப் பேசுதல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

20) தமிழ்ச் சொல் கண்டறிக

Land Breeze

A) பெருங்காற்று

B) சுழல்காற்று

C) கடற்காற்று

D)  நிலக்காற்று

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

21) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிக

A) Emblem           –        அறிவாளா்

B) Thesis              –        ஆய்வேடு

C) Document                –        நிலப்பகுதி

D)  Consulate                –        வணிகக் குழு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

22) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைப் பெற்றிருக்கும் இணையைக் குறிப்பிடுக.

A) Agreement               –        ஒப்பந்தம்

B) Objective                  –        நம்பிக்கை

C) Constitution    –        கொள்கை

D)  University                –        கல்லுாரி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

23) கூற்று – சரியா? தவறா?

1) ஆதிச்சநல்லுாரில் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது

2) இறந்தவா்களின் உடல்களைப் புதைக்கப் பழந்தமிழா்கள் பயன்படுத்திய முது மக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

3) இவ்வூர் மதுரை மாவட்டத்தில் உள்ளது

A) கூற்று 1, 2, 3 சரி

B) கூற்று 1, 2 சரி 3 மட்டும் தவறு

C) கூற்று 1, 2, 3 தவறு

D)  கூற்று 1 மற்றும் சரி 2, 3 தவறு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

24) கூற்று காரணம் – சரியா? தவறா?

கூற்று       : இடைச்சொற்கள் பெயரையும் வினையையும் சார்ந்து இயங்கா

காரணம் : தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல

A) கூற்று சரி, காரணம் தவறு

B) கூற்று சரி, காரணம் சரி

C) கூற்று தவறு, காரணம் சரி

D)  கூற்று தவறு, காரணம் தவறு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

25) கூற்று காரணம் – சரியா? தவறா?

கூற்று :  ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றமை உண்டு

காரணம் : ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும்

A) கூற்ற சரி, காரணம் சரி

B) கூற்று சரி காரணம் தவறு

C) கூற்று தவறு, காரணம் சரி

D)  கூற்று தவறு, காரணம் தவறு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

26) குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக

A) ஒன்று ஓதல்

B) உரிமை ஊக்கம்

C) மக்கள் அறிவியல்

D)  அகல் ஆவல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

27) குறில் நெடில் மாற்றம் உறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக

படலை – பாடலை

A) மலை – மாலை

B) மாலை – மிடற்றுப்பாடல்

C) அலை – ஆலை

D)  கடல் – பாடல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

28) ஒரு பொருள் தரும் பலசொற்கள் – ஆறு

A) நதி, எண்

B) வாழி, பேறு

C) அருமை, அன்பு

D)  ஓடு, ஆடு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

29) மாலை – இரு பொருள் தருக

A) விடியற்காலை, காலை மடக்குதல்

B) பார், உலகம்

C) மலா்மாலை, அந்திப்பொழுது

D)  மலர், பூ

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

30) மது – இருபொருள் தருக.

A) மதி, நிலவு

B) மாது, பெண்

C) தேன், கள்

D)  மதார், செருக்கு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

31) சரியான சொல்லைத் தோ்ந்தெடு

___________________  வந்து கொண்டு இருக்கிறார்கள்

A) அவைகள்

B) நாம்

C) அவா்கள்

D)  அது

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

32) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சோ்க்க (வாழ்வியல் அறிவைக்)

A) தமிழ் ________________ கொண்டுள்ளது

B) நாம் ________________ வாங்க வேண்டும்

C) புத்தகங்கள் __________________ கொடுக்கின்றன

D)  நல்ல நுால்கள் __________________ நல்வழிப்படுத்துகின்றன

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

33)  கீழ்க்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லை எழுதுக

காயிதே மில்லத் அவா்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவா் _________________ அவா் எளிமையை விரும்பியவா்

A) ஏனெனில்

B) எனவே

C) ஆகையால்

D)  அதனால்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

34) சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக

தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். _______________ கடுஞ்சொல்லால் ஏற்படும் காயம் ஆறாது.

A) அதனால்

B) ஆனால்

C) எனவே

D)  ஆகையால்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

35) சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

“தமிழ்மொழி தான் மிகப்பழமையான மொழி ___________________ தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்“ என்றார் காயிதே மில்லத்

A) ஆனால்

B) எனவே

C) ஏனெனில்

D)  அதுபோல

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

36) சரியான வினாச்சொல் அமைந்த வாக்கியங்களைக் கண்டறிக

I) தமிழ்ப்பாவை பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?

II) தமிழ்ப்பாவை பள்ளிக்கு எதற்குச் சென்றாள்

III) தமிழ்ப்பாவை பள்ளிக்கு ஏன் சென்றாள்?

IV) தமிழ்ப்பாவை பள்ளிக்கு எப்பொழுது சென்றாள்?

A) I, II, IV சரி

B) I, IV சரி

C) I, II, III, IV சரி

D) II, III, IV சரி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

37) வினாச்சொல்லை சரியாகப் பொருத்துக

I) நுாலகம்                           –        A) ஏன்?

II) பாண்டவா்கள்              –        B) யார்?

III) பள்ளிக்கு சென்றது   –        C) எங்குள்ளது?

IV) செடிகள் வாடுவது     –        D) எத்தனைப்பேர்?

A) I – B                 II – C           III – D                   IV – A

B) I – C                 II – D           III – A                   IV – B

C) I –D                  II – A           III – B          IV – C

D)  I –C                 II – D           III – B          IV – A

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

38) பின்வரும் வினாத்தொடா்களில் ஏவல் வினாத் தொடரைக் கண்டறிக.

A) ஆகுபெயா் என்றால் என்ன?

B) நீ வரிசையில் நிற்க மாட்டாயா?

C) இந்நுாற்பாவிற்கு பொருள் யாது?

D)  தமிழ்ப்புத்தகம் உன்னிடம் தானே இருக்கிறது?

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

39) பொருத்தமான வினையடிச் சொல்லைக் கண்டறிக

புத்தகம் மேசையில் இருக்கிறது

A) இரு

B) இருக்கிறது

C) இருந்தது

D)  இருக்கும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

40) அதைச் செய்தது __________________________

I) நான் அன்று

II) நான் அல்லேன்

III) நான் அல்ல

IV) நான் இல்லை

A) III

B) II

C) IV

D)  1

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

41) தேன், வான் – இவ்விரு சொற்கணுக்கும் பொருந்தி வரம் சொல் எதுவெனக் கண்டறிக

A) வளி

B) துளி

C) அடை

D)  படை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

42) சரியான இணையைக் கண்டறிக

A) தண்ணீா் – பருகினான்

B) தண்ணீா் – குடித்தான்

C) பால் – அருந்தினான்

D)  பால் – குடித்தான்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

43) சொற்களை ஒழுங்கு படுத்தி சொற்றொடராக்குதல்

கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?

A) பேச்ச மொழியை உலக வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கிய வழக்கு என்றும் கூறுவா்

B) பேச்சு மொழியை இலக்கிய வழக்கு என்றும், எழுத்து மொழியை உலக வழக்கு என்றும் கூறுவா்

C) பேச்சு மொழியை பேச்சு வழக்கு என்றும், எழுத்து மொழியை இலக்கண வழக்கு என்றும் கூறுவா்

D)  பேச்சு மொழியை இலக்கண வழக்கு என்றும், எழுத்து மொழியை பேச்சு வழக்க என்று கூறுவா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

44) எழுத்து வழக்கில் அமைந்துள்ள வாக்கியங்ககளைக் கண்டறிக

I) “பசிக்குது அண்ணா“ என்கிறான் தம்பி

II) “அம்மா ஏன் நமக்குச் சாப்பாடு கொடுத்தனுப்புறதில்ல?” என்றான் தம்பி

III) “மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தப் போகிறேன்“ என்றார் முதல்வா்

IV) “தமிழ்நாட்டுக் குழந்தைகள் பசியறிமாமல் படிக்க வேண்டும்“ என்றார் தலைவா்

A) I, II, III

B) III, IV

C) I, IV

D)  II, III

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

45) எந்தமிழ்நா – பிரித்து எழுதுக

A) எந் + தமிழ்  + நா

B) எந்த + தமிழ் + நா

C) எம் + தமிழ் + நா

D)  எந்தம் + தமிழ் + நா

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

46) நிறுத்தற்குறிகளை அறிதல்

எது சரியானது?

A) “வளா் பிறையும் தேய் பிறையும்“ என்னும் தலைப்பில் பேசுக.

B) மலையைப் போற்றுவோம்?

C) ஆகா, துாண்டிலில் மாட்டியத நீதான

D)  என்னே உயரமான மலை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

47) கீழ்கண்டவற்றில் எங்கு முற்றுப்புள்ளி பயன்படுத்துவதில்லை?

A) சொற்றொடரின் இறுதியில்

B) மேற்கோள் குறிகளுக்கு அடுத்து

C) சொற்குறுக்கங்களை அடுத்து

D)  பெயரின் தலைப்பு எழுத்தை அடுத்து

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

48) புதுகை – என்பதன் மரூஉ எது?

A) புதுச்சேரி

B) நாகப்பட்டினம்

C) புதுக்கோட்டை

D)  கும்பகோணம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

49) ஊா்ப்பெயா்களின் மரூஉவை எழுது

மயிலாப்பூா்

A) மயிலை

B) மைலம்

C) மைலாப்பூர்

D)  மயிலாடுதுறை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

50) ஊா்ப் பெயர்களின் மரூஉவைக் கண்டுபிடிக்க

தவறான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக

A) திருச்சி                   –        திருச்சிராப்பள்ளி

B) கோவை                 –        கொடைக்கானல்

C) நெல்லை               –        திருநெல்வேலி

D) உதகை                  –        உதகைமண்டலம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

51) “வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்“ – இணையான தமிழ்ச் சொல் தருக

A) தங்கக்கட்டி

B) எடைகுறைந்த தங்கக்கட்டி

C) வெள்ளிக்கட்டி

D)  நிறை குறைந்த தங்கக்கட்டி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

52) பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுதுக

A) கணியன் பள்ளி முடிந்து வீடு திரும்பினான்

B) மணி காலிங்பெல்லை அழுத்தினான்

C) மாணவா்கள் கிரவுண்டில் விளையாடினா்

D)  இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

53) இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக

டெம்பெஸ்ட்

A) நிலக்காற்று

B) கடற்காற்று

C)  பெருங்காற்று

D)  சுழல்காற்று

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

54) விடை வகைகள்

“எனக்குக் கற்றுத் தருகிறாயா“ என்ற வினாவிற்று “கற்றுத் தருவேன் என் உரைப்பது

A) மறை விடை

B) ஏவல் விடை

C) நோ் விடை

D)  சுட்டு வடை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

55) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக

A) Guild               –        மீட்டுருவாக்கம்

B) Patent              –        வணிகக் குழு

C) Nanotechnology      –        மீநுண் தொழில் நுட்பம்

D)  Myth              –        கலைப்படைப்பு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

56) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக

A) Worksheet                –        முகப்பு த்தாள்

B) Spread sheet   –        விரிவுத்தாள்

C) Wall Paper               –        ஒப்பனைத்தாள்

D)  Ledger           –        பதிவேறு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

57) அலுவல் சார்ந்த கலைச் சொல்லைக் கண்டறிக

ஃபாண்ட்

A) எழுத்து வடிவம்

B) எழுத்து அளவு

C) எழுத்துரு

D)  எழுத்து திருத்தம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

58) “கிணற்றத் தவளை போல“ – உவமை கூறும் பொருள் தெளிக

A) தெளிவு

B) அறிவுடைமை

C) உலக அறிவின்மை

D)  தெளிவின்மை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

59) “விழலுக்கு இறைத்த நீா் போல – உவமை கூறும் பொருத்தமான பொருளைத் தோ்க

I) பயனின்மை

II) இல்லாதிருத்தல்

III) பயனடைதல்

IV) மறைந்து போதல்

A) I

B) IV

C) II

D)  III

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

60) வாக்கிய அமைப்பினைக் கண்டறிக

அவனைத் திருந்தச் செய்தான்

A) செய்வினைத் தொடா்

B) செயப்பாட்டு வினைத் தொடா்

C) தன்வினைத் தொடா்

D) பிறவினைத் தொடா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

61) எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்

“குமரன் பாடன் படித்தான்“

A) செயப்பாட்டு வினை வாக்கியம்

B) செய்வினை வாக்கியம்

C) பிறவினை வாக்கியம்

D) தன்வினை வாக்கியம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

62) செயப்பாட்டு வாக்கியங்களை கண்டு எழுதுக

A) கவிதா கவிதை எழுதவில்லை

B) கவிதா கவிதா எழுதினாளா?

C) கவிதா கவிதை எழுதப்பட்டது

D) கவிதை கவிதாவால் எழுதப்பட்டது

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

63) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

மாணவா்களே “இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவுதல் என்ன வினா?

A) அறிவினா

B) ஐயவினா

C) அறியாவினா

D) கொளல் வினா

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

64) விடைக்கேற்ற வினாவைத் தோ்ந்தெடுக்க.

காட்டில் புலி நடமாட்டம் உள்ளது

A) புலி நடமாட்டம் காட்டில் உள்ளது

B) காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

C) ஆ! புலி நடமாட்டம் காட்டில் உள்ளதே

D) புலி காட்டில் நடமாடுகின்றது

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

65) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க

குடியரசுத் தலைவா் நாளை தமிழகம் வருகிறார்.

A) குடியரசுத் தலைவா் என்று தமிழகம் வருகிறார்?

B) குடியரசுத் தலைவா் ஏன் தமிழகம் வருகிறார்?

C) குடியரசுத் தலைவா் நாளை எவ்வாறு வருகிறார்?

D) குடியரசுத் தலைவா் எதற்காக நாளை தமிழகம் வருகிறார்?

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

66) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக. (சரியான தொடா் தேர்க)

A) எளிமையை நான் எப்போதும் கடைபிடிப்பேன்

B) கடைபிடிப்பேன் நான் எப்போதும் எளிமையை

C) நான் எப்போதும் எளிமையைக் கடைபிடிப்பேன்

D) எளிமையைக் கடைபிடிப்பேன் எப்போதும் நான்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

67) சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான தொடரினை உருவாக்குக

A) ஒரு சிறு பெண்ணுடன் வாழ்க்கை புத்தகம் ஒன்று நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது

B) புத்தகம் ஒன்று ஒருசிறு பெண்ணுடன் வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது

C) வாழ்க்கை நெடுகப் பேசிக்கொண்டே வருகிறது புத்தகம் ஒன்று ஒரு சிறு பெண்ணுடன்

D) புத்தகம் ஒன்று பேசிக்கொண்டே வருகிறது வாழ்க்கை நெடுக ஒரு சிறு பெண்ணுடன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

68) சொற்களை ஒழுங்குபடுத்தி முறையான பொடராக்குக

கழுத்து பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.

A) பிறக்கும் இடம் உயிரெழுத்து கழுத்து ஆகும்

B) உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்

C) கழுத்து உயிரெழுத்து ஆகும் பிறக்கும் இடம்

D) பிறக்கும் உயிரெழுத்து கழுத்து இடம் ஆகும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

69) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக

புன்பமொப்லமைழி

A) மென் மொழிப்புலமை

B) புன் மொழிப்புலமை

C) பன் மொழிப்புலமை

D) புலமைப் பொன் மொழி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

70) அகர வரிசைப்படுத்துக

A) பூட்டு, உழக்கோல், கலப்பை, கொழு

B) கொழு, பூட்டு, உழக்கோல், கலப்பபை

C) உழக்கோல், கலப்பை, கொழு, பூட்டு

D) கலப்பை, கொழு, பூட்டு, உழக்கோல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

71) அகரவரிசைப்படி சொற்களைச் சீா் செய்க

வௌவால், ஆசிரியா், மனிதன், தையல், ஓணான்

A) ஓணான், ஆசிரியா், மனிதன், தையல் வௌவால்

B) ஆசிரியா், ஓணான், தையல், மனிதன், வௌவால்

C) ஆசிரியா், ஓணான், வௌவால், தையல், மனிதன்

D) ஆசிரியா், ஓணான், தையல், வௌவால், மனிதன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

72) அகர வரிசைப்படுத்திய சரியான விடையைத் தோ்க

A) கலை, காலாம், கண், கடை, கழுத்து

B) கடை, கண், கலை, கழுத்து, கலாம்

C) கடை, கண், கலாம், கலை, கழுத்து

D) கடை, கலாம், கண், கழுத்து, கலை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

73) வேர்ச்சொல்லில் இருந்து வினை முற்றை உருவாக்குக

“பெறு“

A) பெற்று

B) பேறு

C) பெற்றாள்

D) பெறுக

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

74) “சிரி“ என்ற வோ்ச்சொல்லில் இருந்து வினை எச்சத்தை உருவாக்குக

A) சிரித்து

B) சிரிப்பு

C) சிரித்த

D) சிரித்தல்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

75) உண் – என்ற வோ்ச்சொல்லின் வினையெச்ச வடிவம் தருக.

A) உண்டான்

B) உண்ட

C) உண்ணுதல்

D) உண்ட

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

76) வோ்ச்சொல்லைக் கண்டறிக

“வாழ்க்கை“

A) வாழ்

B) வாழ்க

C) வாழு

D) வாழி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

77) வோ்ச்சொல்லைத் தோ்வு செய்க

“துய்ப்பது“

A) துய்

B) துய்த்து

C) துய்த்த

D) துய்ப்பதால்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

78) வோ்ச்சொல்லைத் தோ்வு செய்க

“பயின்றாள்“

A) பயின்

B) பயின்ற

C) பயில்

D) பயின்று

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

79) கப்பல் செலுத்துபவரை இப்பெயா்களாலும் அழைப்பர்

A) நாவாய் ஓட்டுனா், கடல்வழிகாட்டி

B) மீகாமன், நீகான்

C) நங்கூரர், கலஞ்செய்யா்

D) பாய்மரர், பரிமுக அம்பி

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

80) ஒழி என்பதன் பொருள் கண்டறிக

A) அழித்து விடு, தொலைத்து விடு

B) அறிவு, அழகு

C) வெளிச்சம், பதுங்கிக் கொள்

D) ஓசை, புகழ்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

81) சரியான வாக்கிய அமைப்பினைக் கண்டறிக

A) நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது

B) நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது

C) நம் மாநிளம் இந்த ஆன்டு வறட்சியாள் பாதிக்கப்பட்டது

D) நம் மாநிலம் இந்த ஆண்டு வறச்சியால் பாதிக்கப்பட்டது

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

82) ஒல சூவறுபாடறிந்து சரியான தொடரைக் கண்டறிக

A) தோட்டத்தில் மலர்கள் மனம் வீசியதால் மணம் மகிழ்ந்தது

B) தோட்டத்தில் மலர்கள் மனம் வீசியதால் மனம் மகிழ்ந்தது

C) தோட்த்தில் மலர்கள் மணம் வீசியதால் மனம் மகிழ்ந்தது

D) தோட்டத்தில் மலர்கள் மணம் வீசியதால் மணம் மகிழ்ந்தது

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

83) பொருள் வேறுபாடறிந்து பொருத்தமுடைய சொற்களைக் கண்டறிக

பறவை – பரவை

A) புள்       –        கடல்

B) பறத்தல்       –        பரவுதல்

C) கிளி     –        நாவாய்

D) இறகு   –        கரையோரம்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

84) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக

A) Epigraph                   –        சித்திர எழுத்து

B) Lexicography  –        கல்வெட்டு

C) Pictograph               –        அகராதியியல்

D) Phoneme                  –        ஒலியன்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

85) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக

a) Commodity               1) பாரம்பரியம்

B) Voyage            2) கலப்படம்

C) Adulteration   3) கடற் பயணம்

D) Heritage                   4) பண்டம்

          a        b       c        d

A)      4        3        2        1

B)      3        4        1        2

C)      2        4        3        1

D)      1        4        3        2

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

86) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லை அறிக

a) கரன்சி நோட்                1) பற்று அட்டை

b) டெபிட் கார்டு                2) இணையத்தள வணிகம்

c) கிரெடிட் கார்டு              3) பணத்தாள்

d) ஆன்லைன் ஷாப்பிங் 4) கடன் அட்டை

          a        b       c        d

A)      3        1        4        2

B)      1        3        4        2

C)      2        4        1        3

D)      4        1        3        2

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

87) மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக

இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனா்

A) வேய்ந்தனா்

B) போட்டனர்

C) மேய்ந்தனர்

D) கட்டினர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

88) சந்திப் பிழையை நீக்குக

மனிதக் கண்டுப்பிடிப்புகள் அனைத்திலும் நன்மை, தீமை என்று இரண்டுப் பக்கங்கள் இருந்தே வந்திருக்கின்றன

A) கண்டுப்பிடிப்புகள், இரண்டு பக்கங்கள்

B) கண்டுபிடிப்புகள், இரண்டு பக்கங்கள்

C) கண்டுபிடிப்புகள், இரண்டுப் பக்கங்கள்

D) கண்டுப்பிடிப்புகள் இரண்டுப் பக்கங்கள்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

89) வழுவற்ற தொடர் எது?

A) நாளை பேசுகிறான்

B) நாளை பேசுவான்

C) நாளை பேசினான்

D) நாளை பேசிச் சென்றான்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

90) மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக

A) சிங்கம்         –        உறுமும்

B) பசு                  –        கதறும்

C) நாய்     –        கத்தும்

D) குரங்கு         –        குனுகும்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

91) மரபுப் பிழையற்ற சொல்லைத் தெரிவு செய்க

கப்பல் கட்டும் கலைஞர்கள் _________________  என்று அழைக்கப்பட்டனர்

A) தச்சா்

B) கொல்லர்

C) கலைஞா்

D) கம்மியர்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

92) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

A) வன் தொடர்

B) மென்தொடா்

C) இடைத்தொடர்

D) கடைத்தொடா்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

93) பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

“மதி“ என்பதன் பொருளைக் குறிக்காத சொல்

A) சந்திரன்

B) சூரியன்

C) அறிவு

D) நிலவு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – B

94) மதுரைக்குச் செல்வாயா? என்ற வினாவிற்குச் செல்லாமல் இருப்பேனா? என்று கூறுவது எவ்வகை விடை?

A) இன மொழி விடை

B) சுட்டு விடை

C) வினா எதிர் வினாதல் விடை

D) மறை விடை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

95) எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

இனிய

A) இனிமை

B) இன்பம்

C) இன்னாத

D) எளிய

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

96) எதிர்ச்சொல்லை எடுத்தெழுது

சோம்பல்

A) விழிப்பு

B) மகிழ்ச்சி

C) களிப்பு

D) சுறுசுறுப்பு

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

97) “மருள்“ எதிர்ச்சொல் தருக

A) தெருள்

B) அருள்

C) உருள்

D) பொருள்

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

98) வாழை + இலை – சோ்த்தெழுதுக

A) வாழைலை

B) வாழிலை

C) வாழைஇலை

D) வாழையிலை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – D

99) அருந்துணை – பிரித்தெழுதுக

A) அருமை + துணை

B) அரு + இணை

C) அரு + துணை

D) அருமை + இணை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – A

100) அறிவு + உடைமை – சோ்த்தெழுதுக

A) அறிவு உடைமை

B) அறியுடைமை

C) அறிவுடைமை

D) அறிஉடைமை

E) விடை தெரியவில்லை

ANSWER KEY – C

TNPSC TAMIL QUESTIONS

rasi palan today

Tamil Jathagam

Leave a Comment